IND vs ENG : அவர இவ்வளவு சந்தோசமா பார்க்கவே முடியாது, ரிஷப் பண்ட்க்கு நன்றி தெரிவித்த ஜஹீர் கான் – எதற்குனு பாருங்க

Zaheer Khan Rishabh Pant
- Advertisement -

எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் ஜூலை 1-ஆம் தேதி துவங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாளில் கடும் போராட்டத்திற்குப் பின் 338/7 என்று நல்ல ஸ்கோருடன் விளையாடி வருகிறது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு சுப்மன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 15 என முக்கிய பேட்ஸ்மென்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

அதனால் 98/5 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியா 200 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் ஒருபுறம் ஜடேஜா கம்பெனி கொடுக்கும் வகையில் மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் பவுண்டரிகளும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு விரைவாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

கலக்கிய பண்ட்:
அரைசதம் கடந்து தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்திய அவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற ஜாம்பவான் பவுலரை அசால்டாக ரிவர்ஸ் ஸ்வீப் அடித்தும் சுழல் பந்து வீச்சாளரான ஜேக் லீச்சை கங்குலியை போல் இறங்கி இறங்கி சிக்ஸர்களை பறக்கவிட்டும் ஆட்டத்தில் அனலை தெறிக்க விட்டார். அவருடன் பொறுமையாக பேட்டிங் செய்த ஜடேஜா அரைசதம் கடக்க அவரை விட அற்புதமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் வெறும் 89 பந்துகளில் சதமடித்து மிரட்டிய இங்கிலாந்துக்கே மிரட்டல் அளிக்கும் வகையில் மூழ்கிய இந்தியாவை தூக்கி நிறுத்தினார்.

இறுதியில் ஜடேஜாவுடன் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்களை 131.53 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் டி20 இன்னிங்ஸ் விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷார்துல் தாகூர் 1 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக நிற்கும் ஜடேஜா 83* ரன்களுடன் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

- Advertisement -

டிராவிட் உற்சாகம்:
நேற்றைய போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் என்றும் பாராமல் டி20 இன்னிங்ஸ் விளையாடிய ரிஷப் பண்ட் கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பல ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அதுவும் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பதற்றத்தால் சிங்கிள் சிங்கிளாக ரன்களை எடுக்க கூடிய 90 ரன்களை தொட்டதும் ரிஷப் பண்ட் கொஞ்சம் கூட பயமில்லாமல் இறங்கி வந்து பவுண்டரிகளை பறக்கவிட்டார். இறுதியாக 98 ரன்களில் பேட்டிங் செய்த அவர் அதிரடியாக பவுண்டரி அடிக்க 2 ரன்கள் எடுத்து டைவ் அடித்து தனது சதத்தை தொட்டது மைதானத்தில் இருந்த அத்தனை பேரையும் எழுந்து நின்று கைதட்ட வைத்தது.

அவரின் திறமையைப் பாராட்டி பெவிலியனில் இருந்த விராட் கோலி, புஜாரா போன்ற சீனியர் இந்திய வீரர்களும் கேப்டன் பும்ராவும் எழுந்து நின்று ஆரவாரமாக கைதட்டி பாராட்டினர். அவர்களுக்கு மத்தியில் ரிஷப் பண்ட் அடித்த சத்தத்தை தாமே அடித்தது போல் வெறித்தனமாக எழுந்து நின்று கைதட்டி பாராட்டிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ரியாக்சன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஏனெனில் பொதுவாகவே பொறுமையின் சிகரமாக காட்சியளிக்கும் அவர் 99% சமயங்களில் வென்றாலும் தோற்றாலும் ஒரே மாதிரியாகவே இருப்பார். அப்படிப்பட்ட அவரை ரிஷப் பண்ட் போன்றவற்றால் மட்டுமே இந்த அளவுக்கு ஆரவாரப் படுத்த முடியும் என்று பல ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஜஹீர் கான் நன்றி:
இந்நிலையில் ராகுல் டிராவிட்டை இதுபோல் பார்ப்பது அரிது என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் ஜாஹீர் கான் அதை சாத்தியமாக்கிய ரிஷப் பண்ட்க்கு நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “இதுபோன்ற இந்தியா தடுமாறிய நிலையில் விளையாடிய அற்புதமான இன்னிசை பார்க்கும் போது பலரின் உணர்ச்சிகள் வெளிப்படுகிறது. இதை விளையாடியவர்களுக்கு தான் அந்த இன்னிங்சின் மதிப்பு தெரியும்”

இதையும் படிங்க : IND vs ENG : பண்ட் மற்றும் ஜடேஜா உதவியால் 32 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி – படைத்த சாதனை

“அதிலும் இந்தியாவுக்காக நீண்ட நாட்கள் விளையாடிய ராகுல் டிராவிட் அதன் மதிப்பை நன்கு புரிந்துள்ளார். பொதுவாகவே அமைதியாக காணப்படும் அவர் இதுபோல ஆரவாரமான ரியாக்ஷன் கொடுப்பது நீங்கள் அதிகம் பார்க்க முடியாது” என்று பாராட்டினார். அதேபோல் இந்தியா தடுமாறிய போது பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து போராடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

Advertisement