IND vs ENG : பண்ட் மற்றும் ஜடேஜா உதவியால் 32 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி – படைத்த சாதனை

Rishabh-Pant-and-Ravindra-Jadeja
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூலை ஒன்றாம் தேதி நேற்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் பும்ரா தலைமையிலான இந்திய அணிக்கும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிப்பதால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இருக்கிறது. அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் உள்ளதால் இந்த போட்டி சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rishabh Pant Ind vs ENg

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தீர்மானம் செய்ய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிசை விளையாடி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் எடுப்பதற்குள்ளே 5 விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி 200 ரன்களைக் கூட தொடாது என்றே அனைவரும் நினைத்திருப்பார்கள். ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோரது அபாரமான ஆட்டம் காரணமாக தற்போது இந்திய அணி நல்ல ரன் குவிப்பை வழங்கியுள்ளது. மேலும் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இன்னும் சில ரன்களும் சேர்க்கப்படும் பட்சத்தில் இது முதல் இன்னிங்ஸ்க்கு போதுமான ஸ்கோராக இருக்கும்.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியானது 32 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து மண்ணில் ஒரு புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளது. அதன்படி கடந்த 1990-வது ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் குவித்தது. அதுவே இங்கிலாந்து மண்ணில் முதல் நாள் இந்திய அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய முதல் நாளில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்ததால் 32 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து மண்ணில் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணி பதித்தது.

இதையும் படிங்க : IND vs ENG : மூழ்கிய இந்தியாவை நங்கூரமாய் காப்பாற்றிய பண்ட் !ஜாம்பவான் பவுலருக்கு சரமாரியான அடி, குவிந்த வாழ்த்துக்கள்

இப்படி இந்திய அணியின் இந்த 338 ரன்கள் என்கிற மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு பின்னர் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் இருந்தனர் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 111 பந்துகளை சந்தித்து 20 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 146 ரன்களையும், ஜடேஜா 123 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement