IND vs ENG : மூழ்கிய இந்தியாவை நங்கூரமாய் காப்பாற்றிய பண்ட் !ஜாம்பவான் பவுலருக்கு சரமாரியான அடி, குவிந்த வாழ்த்துக்கள்

Anderson Jack Leach Rishabh Pant
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்கியது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் 17, புஜாரா 13 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தினர். போதாகுறைக்கு அடுத்து வந்த விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 15 என முக்கிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 98/5 என திணறிய இந்தியா ஆரம்பத்திலேயே மோசமான தொடக்கத்தை பெற்றது.

- Advertisement -

காப்பாற்றிய பண்ட்:
அப்போது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் – ரவீந்திர ஜடேஜா சரிவை சரி செய்யும் வகையில் நங்கூரத்தை போட்டு நிதானமாக பேட்டிங் செய்ய துவங்கினார். இதில் ஒருபுறம் ரவீந்திர ஜடேஜா மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு பதில் தாக்குதல் கொடுத்தார். நேரம் செல்லச்செல்ல அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட இவர் ஒரு கட்டத்தில் டி20 இன்னிங்ஸ் போல சரவெடியான பேட்டிங்கை துவங்கினார். அவருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் ஜடேஜா பேட்டிங் செய்ய 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றிய இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து திணறியது.

அதில் இங்கிலாந்தை தெறிக்கவிட்ட ரிஷப் பண்ட் வெறும் 89 பந்துகளில் சதமடித்து அசத்த அவருடன் பொறுமையாக பேட்டிங் செய்த ஜடேஜா அரைசதம் கடந்து அசத்தினார். 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி இந்தியாவை முழுமையாக காப்பாற்றிய இந்த ஜோடியில் ஜடேஜாவை விட அற்புதமாகவும் மிரட்டலாகவும் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 19 பவுண்டரி 4 சிக்ஸருடன் டி20 இன்னிங்ஸ் போல 146 (111) ரன்களை 131.53 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்க விட்டு அவுட்டானார். அவருக்கு பின் வந்த ஷார்துல் தாகூர் 1 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் நிலைத்திருக்கும் ஜடேஜா 83* ரன்கள் எடுத்து விளையாடி வரும் நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 338/7 என்று நல்ல நிலைமைக்கு போராடி வந்துள்ளது.

- Advertisement -

ஆண்டர்சனுக்கு அடி:
இப்போட்டியில் இந்தியா 98/5 என தடுமாறிய போது ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா நான் மெதுவாக விளையாடுகிறேன் நீங்கள் மிரட்டலாக விளையாடுங்கள் என்று ரிஷப் பண்ட்க்கு கூறியதை போல் நேற்றைய ஆட்டம் அமைந்தது. ஏனெனில் இருபுறமும் மெதுவாக பேட்டிங் செய்தால் நிச்சயம் இந்தியா ரன்களை விரைவாக சேர்க்க முடியாமல் விக்கெட்டையும் இழந்திருக்கக்கூடும். அதனால் மிரட்டிய இங்கிலாந்துக்கு மிரட்டலை கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் விராட் கோலி, புஜாரா போன்ற இந்திய பேட்ஸ்மேன்களை காலி செய்த எதிரணி பவுலர்களை சரமாரியாக அடித்தார்.

குறிப்பாக 650 விக்கெட்டுகளை எடுத்து வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சனை ஒரு ஸ்கூல் பவுலரை போல இறங்கி வந்து சிக்ஸர் பறக்கவிட்ட ரிஷப் பண்ட் அவரை ஒரு ஜாம்பவான் பவுலர் என்று மதிக்காமல் அசால்டாக ரிவர்ஸ் ஸ்வீப் அடித்ததை பார்த்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வாயடைத்துப் போனார்கள். சொல்லப்போனால் “என்னப்பா சச்சினையே நாம் சுலபமாக அவுட் செய்து விட்டோம், இந்த பையன் இந்த அடி அடிக்கிறான்” என்பது போல் அவரிடம் அடிவாங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் கொடுத்த ரியாக்சன் வைரலாகி வருகிறது.

- Advertisement -

குவியும் பாராட்டு:
அதேபோல் பொதுவாகவே சுழல் பந்துவீச்சை விரும்பக்கூடிய ரிஷப் பண்ட்க்கு இப்போட்டியில் வசமாக சிக்கிய இங்கிலாந்தின் ஜேக் லீச்சை வச்சு செய்த அவர் இறங்கி இறங்கி வந்து கங்குலியை போல் சிக்ஸர் பறக்க விட்டதை இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். அதுவும் ஒரே ஓவரில் 22 ரன்களை பறக்கவிட்ட அவரின் ஒரு பந்தில் தனக்கே உரித்தான ஒற்றை கையில் அடித்த ஒரு சிக்ஸர் 101 மீட்டர்கள் பறந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க : IND vs ENG : மீண்டும் வாயை விட்டு மாட்டிய மைக்கேல் வாகன், கலாய்த்து தள்ளும் இந்திய ரசிகர்கள் – என்ன நடந்தது

அந்த அளவுக்கு அடிவாங்கிய ஜேக் லீச் ஒரு கட்டத்திற்குப் பின் பந்துவீசவே வரவில்லை. அப்படி மிரட்டலாகவும் அபாரமாகவும் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் ஆட்டத்தை பார்த்த வீரேந்திர சேவாக், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைத்து ஜாம்பவான்களும் அவருக்கு பாராட்டுகளை மழையாக தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement