முகத்தில் அடிச்ச மாதிரி பேசுனாலும் மொத்த டீமையும் நெருப்பா மாத்திடுவாரு.. கம்பீர் அதுக்கு சரியானவர்.. வாசிம் அக்ரம்

Wasim Akram 44
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இந்த வருடம் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய அந்த அணி லீக் சுற்றின் முடிவில் வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதே வேகத்தில் பிளே ஆஃப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா சேப்பாக்கத்தில் நடைபெறும் ஃபைனலில் விளையாட உள்ளது.

அந்த அணியின் இந்த வெற்றிக்கு கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் ஏற்கனவே 2012, 2014இல் கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்த அவர் இந்த வருடம் லக்னோ அணியிலிருந்து வெளியேறி கொல்கத்தாவின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். கொல்கத்தா அணிக்கு வந்ததுமே சுனில் நரைனை மீண்டும் அவர் ஓப்பனிங்கில் களமிறக்கிய முடிவு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது.

- Advertisement -

இந்தியாவுக்கு சரியானவர்:
அதன் காரணமாக ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ அணுகியதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் கௌதம் கம்பீர் எதையும் மறைக்காமல் முகத்தில் அடித்தது போல் நேருக்கு நேராக பேசக்கூடியவர் என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார். மேலும் மொத்த அணியையும் ஆக்ரோசமாக செயல்பட வைக்கக்கூடிய கம்பீர் அப்பதவிக்கு தகுதியானவர் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் அவர் சரியானவர். அது கௌதம் கம்பீர் அப்பதவியை ஏற்றுக் கொள்கிறாரா என்பதை பொறுத்தது. அவர் தற்போது அரசியலை விட்டுள்ளார். அது நேரத்தை எடுக்கக்கூடிய வேலையாகும். மிகவும் அறிவுப்பூர்வமான அவர் அந்த வேலை எளிதல்ல என்பதை உணர்ந்துள்ளார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது”

- Advertisement -

“கம்பீர் மிகவும் எளிமையானவர். ஆனால் எதையும் இருமுறை சிந்திக்காமல் நேரடியாக பேசக்கூடியவர். அது போன்ற தரம் இந்திய கிரிக்கெட்டின் கலாச்சாரத்தில் இல்லை. நம்முடைய கலாச்சாரத்தில் மக்களை காயப்படுத்தக் கூடியவவற்றை சொல்ல மாட்டோம். ஆனால் தமக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் அதை கம்பீர் உங்களுடைய முகத்துக்கு நேராக சொல்லி விடுவார்”

இதையும் படிங்க: ஐபிஎல் சுமாரா போனாலும்.. இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையில் அவர் ஸ்பெஷலா ஆடுவாரு.. யுவ்ராஜ் நம்பிக்கை

“அது தான் அவருடைய தரம். அதை அனைவரும் விரும்புகின்றனர். பல நேரங்களில் அவர் ஆக்ரோசமாக இருப்பார். அதே ஆக்ரோசத்தை அவர் அணிக்கும் கொண்டு வருவார். இருப்பினும் அது அவர் அந்தப் பொறுப்பை ஏற்கிறாரா என்பதை பொறுத்தது. இது போக ஆசிஸ் நேஹ்ரா, விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரின் பெயர்களையும் நான் கேட்டேன். எனவே இந்த 3 இந்தியர்களுமே அந்த பதவிக்கு நல்ல தேர்வு. உங்கள் நாட்டவரையே அப்பதவியில் வைத்துக் கொள்ளுங்கள். இதுவரை டிராவிட் நன்றாக செயல்பட்டார். அவருக்கு முன் ரவி சாஸ்திரி எடுத்துக்காட்டாக இருந்தார்” என்று கூறினார்.

Advertisement