சாம்சனுக்கு இடமில்லை.. தனது 2024 டி20 உ.கோ இந்திய பிளேயிங் லெவனை வெளியிட்ட யுவராஜ் சிங்

Yuvraj Singh 5
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே வெளியிடப்பட்டது. அந்த அணியில் தமிழக வீரர் நடராஜன், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படாதது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மற்றப்படி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் விராட் கோலி, பும்ரா, சூரியகுமார் யாதவ், ஜடேஜா, சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதே போல 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் ஃபண்ட் ஆகிய இருவருமே விக்கெட் கீப்பார்களாக தேர்வாகியுள்ளனர்.

- Advertisement -

யுவராஜ் லெவன்:
இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் 11 பேர் கொண்ட அணியை முன்னாள் ஜாம்பவான் வீரர் யுவராஜ் சிங் தேர்வு செய்துள்ளார். அதில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுத்துள்ள அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓப்பன் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். விராட் கோலி தம்முடைய 3வது இடத்தில் விளையாட வேண்டும். அதைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் மற்றும் சில அதிரடியாக விளையாடக் கூடிய வீரர்கள் வேண்டும்”

“அங்கே இடது வலது கை பேட்ஸ்மேன்கள் கலவையாக இருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் 2 சேர்க்கை இருக்கும் போது எதிரணி சிறப்பாக பந்து வீசுவது கடினமாக இருக்கும். விக்கெட் கீப்பராக நான் ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுப்பேன். சஞ்சு ஃபார்மில் இருந்தாலும் பண்ட் இடது கை பேட்ஸ்மேன். எனவே கடந்த காலங்களைப் போல இந்தியாவுக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் திறமை அவரிடம் இருப்பதாக நம்புகிறேன்”

- Advertisement -

“அதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பையில் ஸ்பெஷலாக செயல்படுவார் என்று நம்புகிறேன். அவரைத் தொடர்ந்து இந்தியாவுக்காக கடைசி டி20 தொடரில் அசத்திய சிவம் துபே ஐபிஎல் தொடரிலும் நன்றாக செயல்பட்டார். மிடில் ஆர்டரில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் இதுதான்.. ஆனாலும் எங்களுக்கு சேன்ஸ் இருக்கு – பேட் கம்மின்ஸ் பேட்டி

“ஸ்பின்னராக யுஸ்வேந்திர சஹால் தற்போது நன்றாக பந்து வீசுவதால் அணியில் இருக்க வேண்டும். உலகக்கோப்பையின் 2வது பகுதியில் ஆடுகளங்கள் மெதுவாக மாறும் என்பதால் அவரை போன்றவர் இருப்பது நல்லது. அவருடன் நம்மிடம் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷிதீப் சிங் ஆகியோர் இருப்பார்கள். இந்த அணி வலுவாகவும் நிரூபிக்கக் கூடியதாகவும் இருக்கும்” என்று கூறினார்

Advertisement