இந்த நியூசிலாந்து தொடர் நீங்க முன்னேற பெரிய வாய்ப்பு – இளம்வீரருக்கு அட்வைஸ் கொடுத்த ஜாஹீர் கான்

Zaheer
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது அரையிறுதி சுற்றோடு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள வேளையில் சீனியர் வீரர்களுக்கு முற்றிலுமாக ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

INDvsNZ

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த முதலாவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி மவுன்ட் மாங்கனி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஏகப்பட்ட இளம் வீரர்கள் விளையாட இருப்பதினால் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

அதே வேளையில் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிவேகமாக பந்து வீசும் பந்துவீச்சாளர் இல்லை என்ற குறையையே பலரும் கூறி வந்த வேளையில் இந்த நியூசிலாந்து தொடரில் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் உம்ரான் மாலிக்-க்கு இடம் கிடைத்துள்ளது. எனவே அவரது பந்துவீச்சு இந்த தொடரில் எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் பலரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் கான் கூறுகையில் : இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கிற்கு இந்த நியூசிலாந்து தொடர் ஒரு முக்கியமான தொடராக அமைய உள்ளது. ஏனென்றால் அவரது வளர்ச்சிக்கு இந்த தொடர் அத்தியாவசியமான ஒன்று.

- Advertisement -

உலகின் மற்ற பெரிய நாடுகளுடன் போட்டி போடுவதற்கு இந்திய அணிக்கு இன்னும் பல்வேறு பரிமாணங்கள் தேவை. அந்த வகையில் இந்திய அணியில் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர், பந்தை ஸ்விங் செய்யக்கூடிய ஒருவர், அதிவேகமாக பந்து வீசும் ஒருவர், வெரைட்டியாக வீசும் ஒருவர் என அனைத்து விதமான பவுலர்களும் அவசியம்.

இதையும் படிங்க : ராபின் உத்தப்பாவிற்கு பதிலாக சி.எஸ்.கே அணி அவரைத்தான் தேர்ந்தெடுக்கும் – அஷ்வின் கணிப்பு

அந்த வகையில் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்து வீசக்கூடியவர் என்பதனால் இந்த நியூசிலாந்து தொடரை மட்டும் அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டால் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாமல் அவர் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என உம்ரான் மாலிக்கிற்கு ஜாஹீர் கான் அட்வைஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement