வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை அடுத்த மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தமிழக வீரர் நடராஜன், ரிங்கு சிங் போன்றவர்கள் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே போல சுமாரான ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் வழக்கம் போல இம்முறையும் கோப்பையை வெல்வது கடினம் என்று இந்திய ரசிகர்களே பேசி வருகின்றனர். இருப்பினும் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், பும்ரா, ஜடேஜா, சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஃபைனல் அணிகள்:
எனவே இம்முறையும் குறைந்தபட்சம் இந்தியா நாக் அவுட் சுற்றைத் தொடும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இந்நிலையில் கடைசியாக தங்கள் ஊரில் நடைபெற்ற 2007 உலகக் கோப்பையில் இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியது ஏமாற்றத்தை கொடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். எனவே இம்முறை சிறப்பாக விளையாடி இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று நம்புவதாகவும் லாரா கூறியுள்ளார்.
அதே போல 2012, 2016 வருடங்களில் 2 கோப்பைகளை வென்ற வெஸ்ட் இண்டீஸ் இம்முறை தங்களுடைய சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடிய இந்தியாவுடன் ஃபைனலில் மோதும் என்றும் பிரைன் லாரா கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக செயல்படும். அவர்களிடம் நிறைய நட்சத்திர வீரர்கள் உள்ளனர். வெற்றிக்கு அவர்கள் அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்பட வேண்டும்”
“இந்திய அணியின் தேர்வு பற்றி சில சர்ச்சைகளை கண்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் டாப் 4 அணிகளில் ஒன்றாக இருப்பார்கள். கடற்கரைகளைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸை இங்கிலாந்து அணியினர் எப்போதும் திரும்புவார்கள். எனவே இங்கிலாந்து டாப் 4 அணிகளில் ஒன்றாக இருக்கும். ஆப்கானிஸ்தான் அணியும் அங்கே வருவதற்கான திறமையை கொண்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த தவறான விஷயங்களுக்காக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஃபைனலுக்கு வரலாம்”
இதையும் படிங்க: தல தோனியின் சாதனையை தூளாக்கிய சஞ்சு சாம்சன்.. லெஜெண்ட் வார்னேவையும் முந்தி 2 அபார சாதனை
“2007இல் இந்தியா இரண்டாவது சுற்றுடன் வெளியேறியது கரீபியன் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதை நாங்கள் மீண்டும் பார்க்க விரும்பவில்லை. எனவே இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஃபைனலில் மோதும். அதில் சிறந்த அணி வெல்லும்” என்று கூறினார். அத்துடன் இந்தியா 4 ஸ்பின்னர்களை தேர்வு செய்தது மோசமான முடிவல்ல என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.