தல தோனியின் சாதனையை தூளாக்கிய சஞ்சு சாம்சன்.. லெஜெண்ட் வார்னேவையும் முந்தி 2 அபார சாதனை

Sanju Samson 3
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றி 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு அடுத்த 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றால் போதும் என்ற நல்ல நிலையிலேயே இருக்கிறது.

வரலாற்றின் முதலும் கடைசியுமாக ராஜஸ்தான் 2008 ஐபிஎல் கோப்பையை ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையில் வென்றது. அதன் பின் ராகுல் டிராவிட், ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கே தடுமாறி மாதிரி வந்தது. அந்த நிலையில் 2021 சீசனில் கேப்டனாக பொறுப்பேற்ற சஞ்சு சாம்சன் 15 வருடங்கள் கழித்து 2022 சீசனில் ராஜஸ்தானை ஃபைனல் வரை அழைத்து சென்றார்.

- Advertisement -

அபார சாதனை:
அதே வேகத்தில் இந்த வருடமும் அவருடைய தலைமையில் அசத்தி வரும் ராஜஸ்தான் கிட்டதட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் இந்த வருடம் இதுவரை விளையாடிய 11 போட்டியில் 471* ரன்கள் குவித்துள்ள சஞ்சு சாம்சன் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தை பிடித்து ஆரஞ்சு தொப்பியை வெல்ல போட்டியிட்டு வருகிறார்.

குறிப்பாக மே 7ஆம் தேதி டெல்லிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 222 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு தனி ஒருவனாக 86 (46) ரன்கள் குவித்த அவர் முழுமூச்சுடன் வெற்றிக்கு போராடினார். அந்தப் போட்டியில் 6 சிக்ஸர்களை அடித்த சஞ்சு சாம்சன் இதுவரை தனது ஐபிஎல் கேரியரில் 159 இன்னிங்ஸில் 205* சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 200 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் எம்.எஸ். தோனி 165 இன்னிங்ஸில் 200 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதே பட்டியலில் விராட் கோலி 180, ரோஹித் சர்மா 185, சுரேஷ் ரெய்னா 193 இன்னிங்ஸில் 200 சிக்ஸர்கள் அடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும் டெல்லிக்கு எதிரான போட்டியும் சேர்த்து ராஜஸ்தான் அணிக்கு இதுவரை சஞ்சு சாம்சன் 56 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: சுமாரான தீர்ப்பு வழங்கிய அம்பயர் கிடையாது.. ராஜஸ்தானின் தோல்விக்கு இதான் காரணம்.. சங்கக்காரா பேட்டி

இதன் வாயிலாக ராஜஸ்தான் அணிக்காக அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீரர் என்ற ஜாம்பவான் ஷேன் வார்னே சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் வார்னே 55 போட்டிகளில் ராஜஸ்தானின் கேப்டனாக செயல்பட்டதே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் மிகச் சிறப்பாக செயல்படுவதால் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு முதல் முறையாக சாம்சனுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement