தல கேரியர் இப்படி முடியக்கூடாது.. 2025இல் தோனி ஆடனும்ன்னா பிசிசிஐ அதை செய்யக்கூடாது.. ராயுடு கோரிக்கை

Ambati Rayudu 8
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறியது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த தோனி சாதரண கீப்பராக விளையாடினார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய அவர் வயதானாலும் ஃபினிஷிங் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்தார்.

இருப்பினும் 42 வயதாகும் அவர் முழங்கால் வலியால் அவதிப்படுவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்று இறுதிப்போட்டியில் கோப்பையை வென்று சேப்பாக்கம் மைதானத்தில் தோனி வெற்றியுடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெங்களூருவுக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பிசிசிஐ கையில்:
அதனால் வரலாற்றில் மூன்றாவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பையும் நழுவ விட்டது. அதே காரணத்தால் தோனி வெற்றிகரமாக ஐபிஎல் கேரியரை ஃபினிஷிங் செய்யாமலேயே வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதிலும் கடைசி ஓவரில் 110 மீட்டர் சிக்ஸர் அடித்த அவர் ஃபினிஷிங் செய்ய முடியாமல் சோகமாக அமர்ந்திருந்தது சிஎஸ்கே ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

இந்நிலையில் மகத்தான தோனியின் கேரியர் இப்படி முடிவதை பார்க்க விரும்பவில்லை என அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். எனவே அவர் தொடர்ந்து விளையாடுவதற்கு இம்பேக்ட் வீரர் விதிமுறையை பிசிசிஐ நீக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளும் ராயுடு இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது அவருடைய கடைசி போட்டியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் தனது கேரியரை இப்படி முடிப்பதை நான் பார்க்க விரும்பவில்லை”

- Advertisement -

“அதனாலேயே அவுட்டான போது அவரும் விரக்தியை வெளிப்படுத்தினார். அந்த வகையில் தோனியும் பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்று வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய விரும்பினார். இருப்பினும் அது நடக்காததால் தோனி மீண்டும் அடுத்த வருடம் வரலாம் என்பது உங்களுக்கு தெரியாது. இம்பேக்ட் வீரர் விதிமுறை கடைசி சில ஓவர்களில் மட்டும் அவர் விளையாடி தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கிறது”

“எனவே பிசிசிஐ இந்த விதிமுறையை நீக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் தோனி விளையாடுவதை நாங்கள் இப்போதும் பார்க்க விரும்புகிறோம். எனவே தோனி மீண்டும் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது பிசிசிஐ கையில் இருக்கிறது” என்று கூறினார். அந்த வகையில் தோனி அவருடைய ஐபிஎல் கேரியரை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

Advertisement