சுமாரான தீர்ப்பு வழங்கிய அம்பயர் கிடையாது.. ராஜஸ்தானின் தோல்விக்கு இதான் காரணம்.. சங்கக்காரா பேட்டி

Kumar Sangakkara 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3வது தோல்வியை பதிவு செய்தது. குறிப்பாக மே 7ஆம் தேதி டெல்லிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி தொடர்ந்து 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது. எனவே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு அடுத்த 3 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்றால் போதும் என்ற நல்ல நிலையிலேயே ராஜஸ்தான் இருக்கிறது.

இருப்பினும் அந்த போட்டியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்டான விதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது 222 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், ரியான் பராக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார்கள். இருப்பினும் எதிர்ப்புறம் டெல்லிக்கு சிம்ம சொப்பனமாக பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் 86 (46) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:
ஆனால் அப்போது முகேஷ் குமார் வீசிய 15வது ஓவரின் 4வது பந்தில் அவர் அடித்த சிக்சரை பவுண்டரி எல்லையில் ஷாய் ஹோப் பிடித்தார். இருப்பினும் அவருடைய கால்கள் பவுண்டரி எல்லையில் 2 முறை பட்டது போல் தெரிந்தால் அதை சோதிக்குமாறு நடுவரிடம் சஞ்சு சாம்சன் வாதிட்டார். ஆனால் அதை 3வது நடுவர் மைக்கேல் கௌ முழுமையாக சோதிக்காமல் ஒரு நிமிடத்திற்குள் அரைகுறையாக பார்த்து விட்டு மீண்டும் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார்.

கடைசியில் அது ராஜஸ்தானின் வெற்றியை பறித்ததால் தோல்விக்கு அம்பயர் தான் காரணம் என்று அந்த அணி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அம்பயர்கள் சுமாரான தீர்ப்பை வழங்கியது உண்மை என்றாலும் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் அடிக்கவில்லை என்று ராஜஸ்தான் அணியின் இயக்குனர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே வெற்றி பெறாதது தங்களுடைய தவறு தான் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது ரிப்ளை காட்டும் கோணத்தை பொறுத்தது. அதில் கால் பவுண்டரியில் பட்டது போல் தெரிகிறது. இருப்பினும் அது 3வது நடுவர் மதிப்பிடுவதற்கு கடினமானதாக இருந்தது. போட்டியின் முக்கியமான நேரத்தில் அது நடந்தது. அதற்காக பல கருத்துக்கள் காணப்பட்டாலும் நாளின் இறுதியில் 3வது நடுவர் கொடுத்த தீர்ப்பின் பின்னே நீங்கள் நிற்க வேண்டும்”

இதையும் படிங்க: 3வது அம்பயர் மைக்கேல் என் நண்பன் தான்.. சரியான தீர்ப்பில் இப்படி செஞ்சது தப்பு.. காலிங்வுட் விமர்சனம்

“அந்த தீர்ப்பு பற்றி எங்களுடைய கருத்துக்களை நாங்கள் நடுவர்களிடம் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அதையும் தாண்டி நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். டெல்லி சிறப்பாக விளையாடியது. நடுவர்கள் விதிமுறையை பின்பற்றுகின்றனர். நாங்கள் எங்களுடைய கருத்துக்களை அவர்களிடம் தெரிவிக்க விரும்புகிறோம். அதனால் நடுவர் மற்றும் வீரர்கள் மீது நிறைய அழுத்தம் இருக்கிறது. எங்களால் முடிந்த வரை சிறந்த முறையில் இதை வரிசைப்படுத்த முயற்சிப்போம்” என்று கூறினார்.

Advertisement