அந்த 2 இந்திய இளம்வீரர்களும் மிகச்சிறப்பாக விளையாடுகின்றனர்.. வெற்றிக்கு பிறகு – பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 69-ஆவது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதல் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரப் சிம்ரன்சிங் 71 ரன்களையும், ரைலி ரூஸோ 49 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி சார்பாக அபிஷேக் சர்மா 66 ரன்களையும் கிளாசன் 42 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியை இப்படி முடித்தது மிகச் சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற போட்டிகளில் நாங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறோம். இந்த சீசனில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். குறிப்பாக அபிஷேக் சர்மா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நான் அவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்க விரும்பவில்லை.

இதையும் படிங்க : ஆவரேஜ் 9.2.. ஒரிஜினல் ஃபார்முக்கு வந்து சிஎஸ்கே கதையை முடித்த துபே? 2024 டி20 உ.கோ நினைத்து ரசிகர்கள் கவலை

அவர் பேட்டிங்கில் சுதந்திரமாக விளையாட வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவரையுமே அவர் சிறப்பாக எதிர் கொள்கிறார். அதேபோன்று நித்திஷ் ரெட்டியும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். உண்மையிலேயே எங்களது அணியின் ஆட்டம் எனக்கு திருப்தி அளிக்கிறது என கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement