ஆவரேஜ் 9.2.. ஒரிஜினல் ஃபார்முக்கு வந்து சிஎஸ்கே கதையை முடித்த துபே? 2024 டி20 உ.கோ நினைத்து ரசிகர்கள் கவலை

Shivam Dube 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாபமாக வெளியேறியது. இந்த வருடம் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடிய சென்னை 14 போட்டிகளில் 7 வெற்றி 7 தோல்விகளை பதிவு செய்து 5வது இடத்தை மட்டுமே பிடித்தது. குறிப்பாக மே 18ஆம் தேதி பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வீழ்ந்தது.

அந்தப் போட்டியில் பெங்களூரு நிர்ணயித்த 219 ரன்களை சேசிங் செய்த சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் 0, மிட்சேல் 4 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் ரச்சின் ரவீந்தரா 62, ரஹானே 33 ரன்கள் எடுத்து சென்னையை மீட்டெடுத்தனர். அப்போது மிடில் ஆர்டரில் வந்த சிவம் துபே அதிரடியாக விளையாடி காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ரசிகர்கள் கவலை:
ஆனால் வழக்கத்திற்கு மாறாக தடுமாறிய அவர் முக்கிய நேரத்தில் எதிர்புறம் நன்றாக செட்டிலாகியிருந்த ரவீந்தராவை ரன் அவுட்டாக்கி அனுப்பி வைத்தார். அத்துடன் அடுத்த ஓவரிலேயே 15 பந்துகளில் 7 ரன்களை எடுத்து அவுட்டான அவர் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் ரன்ரேட் அதிகரித்ததால் கடைசியில் ஜடேஜா 42*, தோனி 25 ரன்கள் எடுத்தும் சென்னை தோல்வியை சந்தித்தது.

அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு 3வது முறையாக தகுதி பெற முடியாமல் வெளியேறிய சென்னை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கத் தவறியது. முன்னதாக கடந்த வருடம் அற்புதமாக விளையாடி சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய சிவம் துபே இந்திய அணியிலும் கம்பேக் கொடுத்தார். அதே வேகத்தில் இந்த வருடமும் அபாரமாக விளையாடிய அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வானார்.

- Advertisement -

ஆனால் உலகக் கோப்பை அணியில் தேர்வான அடுத்த போட்டியிலேயே கோல்டன் டக் அவுட்டான அவர் அதற்கடுத்த போட்டியிலும் கோல்டன் டக் அவுட்டானார். அந்த வகையில் உலகக் கோப்பைக்கு தேர்வாவதற்கு முன்பு வரை சிவம் துபே 2024 ஐபிஎல் தொடரில் 58.3 என்ற சராசரியில் 172.4 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார். ஆனால் உலகக்கோப்பைக்கு தேர்வான பின் அவர் 0, 0, 21, 18, 7 ரன்களை 9.2 என்ற மோசமான சராசரியிலும் 112.2 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஐபிஎல் தொடரை முடித்துள்ளார்.

இதையும் படிங்க: அவ்ளோ தான் முடிஞ்ச்சு.. இதான் கடைசி ஐபிஎல்.. ஆனா தோனி அதை செய்யலன்னா ஆச்சர்யப்படுவேன்.. ஹைடன் ஓப்பன்டாக்

குறிப்பாக பெங்களூருவுக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் 7 (15) ரன்களில் அவுட்டான அவர் சென்னையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் 2019இல் திணறிய சிவம் துபே மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்து சிஎஸ்கே கதையை முடித்து விட்டதாக கவலை தெரிவிக்கின்றனர். மேலும் இப்படியே போய் 2024 டி20 உலகக் கோப்பையில் துபே என்ன செய்யப் போகிறாரோ என்றும் இந்திய ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement