அவ்ளோ தான் முடிஞ்ச்சு.. இதான் கடைசி ஐபிஎல்.. ஆனா தோனி அதை செய்யலன்னா ஆச்சர்யப்படுவேன்.. ஹைடன் ஓப்பன்டாக்

Matthew Hayden 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பதவியை ருதுராஜ் கையில் ஒப்படைத்த தோனி சாதாரண விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடினார். அத்துடன் முழங்கால் வலியால் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடிய அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை வென்று அவரை வெற்றிகரமாக வழி அனுப்பும் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் ஆரம்பம் முதலே சுமாராக விளையாடிய சென்னை மே 18ஆம் தேதி நடந்த வாழ்வா – சாவா போட்டியில் பெங்களூருவிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

ஹைடன் கருத்து:
அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த சென்னை சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. அதே காரணத்தால் தோனியின் ஐபிஎல் கேரியரும் வெற்றிகரமாக முடியாமல் சோகத்தில் நிறைவு பெற்றது என்றே சொல்லலாம். இருப்பினும் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ஃபினிஷிங் செய்யாமல் ஏமாற்றத்தை சந்தித்த தோனி அடுத்த வருடம் விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடி முடித்து விட்டார் என்று மேத்தியூ ஹைடன் உறுதியாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அடுத்த வருடம் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் போன்ற ஏதேனும் ஒரு பதவியில் சிஎஸ்கே அணியுடன் தோனி இல்லாமல் போனால் தமக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று ஹைடன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது முடிந்து விட்டது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“தோனி விளையாடியது இதுவே கடைசி ஐபிஎல் என்று நானும் நம்புகிறேன். இருப்பினும் தோனியை நாம் பார்ப்பது இது கடைசி கிடையாது. சிஎஸ்கே குடும்பத்தில் தோனி ஒரு அங்கமாக அல்லது ஆலோசகராக இல்லாமல் போனால் நான் ஆச்சரியப்படுவேன். உங்களுடைய கேரியரின் முடிவில் இருக்கும் போது மதிப்பு குறைந்த விளையாட்டு வீரராக மீண்டும் வருவதை பார்க்க விரும்ப மாட்டீர்கள்”

இதையும் படிங்க: தல கேரியர் இப்படி முடியக்கூடாது.. 2025இல் தோனி ஆடனும்ன்னா பிசிசிஐ அதை செய்யக்கூடாது.. ராயுடு கோரிக்கை

“முதலில் ஒரு தலைவராக அவர் சென்னை அணியின் தல என்பது இங்கு முதலிடத்தை தவிர வேறு எதுவுமில்லை என்பதை சொல்கிறது. அவர் எப்போதும் தன்னுடைய அறிவை கிரிக்கெட்டில் பயன்படுத்துகிறார். அந்த வகையில் எம்எஸ் தோனி எனும் பவர் எப்போதும் அங்கே இருக்கும். அவர் எப்போதும் பந்தை எளிதாக அடிக்கிறார். இப்படி வீரர்கள் பந்தை அடிப்பதை பார்ப்பதை முன்பகுதியில் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் பின்பகுதியில் பந்தை அடிப்பது மிகவும் கடினமானதாகும்” என்று கூறினார்.

Advertisement