சன் ரைசர்ஸ் அணிக்கெதிராக நாங்க தோத்து இருந்தாலும் இந்த விஷயம் ஹேப்பி தான் – ஜிதேஷ் சர்மா பேட்டி

Jitesh
- Advertisement -

ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 69-ஆவது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியல் ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணியின் சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 71 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு சன் ரைசர்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் ஜிதேஷ் சர்மா கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டி மிகவும் சிறப்பாகவே இருந்தது. எங்களது அணியின் வீரர்கள் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் போராடினர்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் கடைசி வரை போராடியது மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் இன்றி இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி உள்ளோம். அதன்படி எங்களது அணி வீரர்களின் இந்த செயல்பாடு எனக்கு திருப்தி அளிக்கிறது.

இதையும் படிங்க : அந்த 2 இந்திய இளம்வீரர்களும் மிகச்சிறப்பாக விளையாடுகின்றனர்.. வெற்றிக்கு பிறகு – பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி

போட்டிக்கு முன்னதாக என்ன ஆலோசனைகளை மேற்கொண்டாலும் மைதானத்தில் அதனை செயல்படுத்தவில்லை என்றால் அதில் நமக்கு எந்த உதவியும் கிடைக்காது. இந்த மைதானத்தில் தன்மையை அறிந்து அதற்கேற்றாற் போன்றே விளையாடினோம் என ஜித்தேஷ் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement