ராபின் உத்தப்பாவிற்கு பதிலாக சி.எஸ்.கே அணி அவரைத்தான் தேர்ந்தெடுக்கும் – அஷ்வின் கணிப்பு

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியோடு இந்திய அணி வெளியேறிய வேளையில் அடுத்ததாக ரசிகர்களின் கவனம் முழுவதும் ஐபிஎல் பக்கம் திரும்பி உள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது அடுத்த மார்ச் மாதம் துவங்க உள்ளது.

Uthappa-2

இந்த தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலையும், அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களின் பட்டியலையும் ஏற்கனவே வெளியிட்டு விட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து டிசம்பர் 23-ஆம் தேதி அடுத்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமும் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்கும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Manish-Pandey

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வீரரும், தமிழக கிரிக்கெட்ருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இம்முறை சென்னை அணியில் இருந்து ராபின் உத்தப்பா ஓய்வு பெற்றுள்ளதால் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணி யாரை விலைக்கு வாங்கும் என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ராபின் உத்தப்பா ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளதால் அவருக்கு இணையான இந்திய வீரரை சென்னை அணி வாங்க முற்படும். அந்த வகையில் ராபின் உத்தாப்பாவிற்கு பதிலாக சிஎஸ்கே அணி மணிஷ் பாண்டேவை தான் வாங்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : வீடியோ : அறிமுக போட்டியிலேயே சொதப்பியும் இன்று இவ்வளவு வளர தோனியின் அந்த வார்த்தைகளே காரணம் – சுப்மன் கில் நெகிழ்ச்சி

ஏனெனில் கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக விளையாடிய அவர் அந்த அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டது ஆச்சரியமாக உள்ளது. அதே வேளையில் அவரைப் போன்ற அனுபவ கிரிக்கெட் வீரர் உத்தப்பாவின் இடத்தை நிரப்புவார் என்பதனால் நிச்சயம் சிஎஸ்கே அணி அவரை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement