வீடியோ : அறிமுக போட்டியிலேயே சொதப்பியும் இன்று இவ்வளவு வளர தோனியின் அந்த வார்த்தைகளே காரணம் – சுப்மன் கில் நெகிழ்ச்சி

MS Dhoni Shubman Gill
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஏமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் நாடு திரும்பியுள்ளனர். அந்த தொடரில் சந்தித்த தோல்வியால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற ரசிகர்களின் கோரிக்கைகள் வலுத்துள்ளன. அந்த நிலைமையில் அடுத்ததாக ஹர்திக் பாண்டியா தலைமையில் நியூசிலாந்து பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில் பெரும்பாலும் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடரில் வளர்ந்து வரும் இளம் வீரராக கருதப்படும் சுப்மன் கில் முதல் முறையாக தேர்வாகி அசத்தியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இதே நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருதை வென்று அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் அறிமுகமாகி 2019ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்த வரும் வீரர் விருதையும் வென்றார். அதனால் சர்வதேச சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியா பதிவு செய்த யாராலும் மறக்க முடியாத காபா வெற்றியில் தொடக்க வீரராக களமிறங்கி 91 ரன்கள் குவித்து கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

தோனியின் உத்வேகம்:

ஆனால் அதன் பின் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் பேட்டிங் துறையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று தலா 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றிகளுடன் கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட தடுமாறுகிறார் என்ற காரணத்தால் இதுவரை வாய்ப்பு பெறாமல் இருந்து வந்த அவர் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருப்பதால் முதல் முறையாக இந்த நியூசிலாந்து முதல் முறையாக டி20 அணியில் தேர்வாகியுள்ளார். இந்த தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் வரும் காலங்களில் 3 வகையான இந்திய அணியிலும் அசத்த போகும் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் இந்தியாவுக்காக அறிமுகமான போட்டியிலேயே வெறும் 9 ரன்களில் அவுட்டானதால் சோகமான தமக்கு முன்னாள் கேப்டன் தோனி கொடுத்த ஊக்கமே அதிலிருந்து மீண்டெழுந்து பெரிய அளவில் சாதிக்க உதவியதாக சுப்மன் கில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிரபல பாலிவுட் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் அறிமுகமான நாளன்று இந்தியா வெறும் 15 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தேன். அப்போட்டியில் வெறும் 9 ரன்களில் அவுட்டான நான் பெவிலியனுக்கு வெளியே ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்தேன். அந்த சமயத்தில் மிகவும் சோகமாக இருந்த என்னை கவனித்த மஹி பாய் எனது அருகே வந்து “உன்னுடைய அறிமுகப் போட்டி குறைந்தபட்சம் என்னுடைய அறிமுக போட்டியை விட சிறப்பாகவே இருந்தது” என்று என்னிடம் சொன்னார். அப்போது அவர் அவருடைய அறிமுக போட்டியில் கோல்டன் டக் அவுட்டானதை நான் உணர்ந்தேன். அப்போட்டியில் ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமலேயே அவர் ரன் அவுட்டானார்”

“அதை என்னிடம் சிரித்துக் கொண்டே நினைவு படுத்திய தோனி என்னையும் சிரிக்க வைத்தார். என்னைப் பொறுத்த வரை அந்த தருணம் என்னுடைய நெஞ்சத்தை தொட்டு உத்வேகத்தை கொடுத்தது என்று சொல்வேன்” என கூறினார்.  அதாவது 2004இல் வங்கதேசத்துக்கு எதிரான அறிமுக போட்டியில் பந்தை எதிர்கொள்ளாமலே துரதிஷ்டவசமாக ரன் அவுட்டான தோனி நாளடைவில் வரலாற்றில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகி அனைவருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். அப்படிப்பட்ட தோனி அவருடைய அறிமுகப் போட்டியை எடுத்துக்காட்டாக வைத்து சோகமாக இருந்த தம்மை சிரிக்க வைத்து உத்வேகத்தை கொடுத்ததாக சுப்மன் கில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement