IND vs AUS : பேட்டை வெச்சுகிட்டு என்ன பண்றிங்க? எப்போதும் பேட்டிங் பிட்ச் கிடைக்குமா – இந்திய பேட்ஸ்மேன்களை விளாசும் ஜஹீர் கான்

Zaheer
- Advertisement -

சொந்த மண்ணில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் போராடி வென்ற இந்தியா 2வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இத்தொடரில் சென்னையில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் வெறும் 188 ரன்கள் துரத்தும் போது டாப் ஆர்சர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் திணறிய இந்தியாவை ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் போராடி வெற்றி பெற வைத்தனர்.

MItchell Starc IND vs AUS

- Advertisement -

ஆனால் 2வது போட்டியில் அதை விட மோசமாக செயல்பட்ட இந்திய பேட்ஸ்மேன்களால் 117 ரன்களுக்கு சுருண்ட இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது. முன்னதாக விசாகப்பட்டினத்தில் முதல் நாளன்று பெய்ததால் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய அதிரடியான ஸ்விங் வேகபந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியது ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

என்ன பண்றிங்க:
ஆனால் அதே பிட்ச்சில் அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா வெறும் 11 ஓவரில் அடித்து நொறுக்கி 234 பந்துகள் மீதம் வைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக பந்துகள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதிலிருந்து என்ன தான் பிட்ச் பவுலிங்க்கு சாதகமாக இருந்தாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டது தெளிவாக தெரிந்தது. இந்நிலையில் அனைத்து போட்டிகளிலும் பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இருக்காது என்ற நிலைமையில் பவுலிங்க்கு சாதகமான மைதானங்களில் கையில் வைத்திருக்கும் பேட்டை வைத்துக்கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று ரோஹித் சர்மா, கில், விராட் கோலி உள்ளிட்ட இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஜாகிர் கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டியின் ஸ்கோரை பார்க்கும் போது இந்தியா ஆஸ்திரேலியாவை 188 ரன்களுக்கு சுருட்டியது. ஆனால் 2வது போட்டியில் பவுலர்கள் போராட முடியாத அளவுக்கு பேட்ஸ்மேன்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இவை அனைத்தும் நீங்கள் பவுலர்களுக்கு எந்த விதமான நிலைமையை ஏற்படுத்திக் கொடுக்கிறீர்கள் என்பதை பொறுத்ததாகும். எனவே இந்த போட்டியில் பவுலர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று நான் பேசப்போவதில்லை. ஏனெனில் முதல் போட்டியில் அவர்கள் தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்தனர்”

- Advertisement -

“இந்த 2 போட்டிகளில் என்ன நடைபெற்றது என்பதை நீங்கள் பார்த்தால் எங்கே தவறு இருக்கிறது என்பதை உங்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இந்த 2 போட்டிகளிலும் பிரச்சனை முதல் 10 ஓவர்களில் தான் இருந்தது. ஆனால் அங்கே கையில் பேட்டை வைத்திருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அந்த இடத்தில் விளையாடக்கூடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிடில் ஆர்டரில் வரும் வீரர்களுக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கவில்லை”

Zaheer

“மேலும் மிட்சேல் ஸ்டார்க் புதிய பந்தில் சிறப்பாக பந்து வீசி ஏற்படுத்தும் அழுத்தத்தை அடுத்த பவுலர்கள் தொடர்கிறார்கள். அதே போல ஒரு பேட்ஸ்மேன் ஏற்கனவே அவுட்டானதால் நிலவும் அழுத்தத்தை அடுத்து வரும் பேட்ஸ்மேன் தான் சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும். ஆனால் அதை உங்களால் எப்படி தவிர்த்து சமாளிக்க முடியும். அதன் காரணமாகத்தான் இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்படுவதற்கான அனைத்து பதில்களும் உள்ளன. எனவே பேட்ஸ்மேன்கள் நல்ல அடித்தளத்தை கொடுத்தால் தான் பவுலர்கள் போராட முடியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:3 பேருக்கு தான் கவனம் கொடுத்தாங்க, அப்றம் எப்படி ஆர்சிபி கோப்பை ஜெயிக்க முடியும் – பின்னணி காரணத்தை உடைத்த கெயில்

முன்னதாக 2017 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 டி20 உலகக் கோப்பைகளில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய எதிராக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெட்டிப் பாம்பாக அடங்கியது தோல்வியை கொடுத்த நிலையில் அதில் இன்னும் அவர்கள் முன்னேறாமல் இருப்பது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்து வருகிறது.

Advertisement