3 பேருக்கு தான் கவனம் கொடுத்தாங்க, அப்றம் எப்படி ஆர்சிபி கோப்பை ஜெயிக்க முடியும் – பின்னணி காரணத்தை உடைத்த கெயில்

Gayle
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் துவங்குகிறது. இந்த வருடம் கோப்பையை வெல்ல களமிறங்கும் 10 கிரிக்கெட் அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் கோப்பையை எப்படியாவது முத்தமிட வேண்டும் என்ற லட்சியத்துடன் மீண்டும் களமிறங்க உள்ளது. கடந்த 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்டது முதல் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்ற தரமான கேப்டன்களின் தலைமையில் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்ட அந்த அணி 2009, 2011 ஆகிய வருடங்களில் ஃபைனல் வரை சென்று முக்கிய நேரத்தில் சொதப்பி கோப்பையை கோட்டை விட்டது.

அதை விட 2013 முதல் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற நிறைய தரமான வீரர்கள் விளையாடியும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டும் நாக் அவுட் சுற்றில் முக்கிய தருணங்களில் சொதப்பிய அந்த அணி 2016 ஃபைனலில் கையிலிருந்த வெற்றியையும் கோப்பையையும் எதிரணிக்கு தாரை பார்த்தது. அப்போது முதலே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த விராட் கோலி இருக்கும் வரை பெங்களூரு கோப்பையை வெல்ல முடியாது என்ற கிண்டல்கள் எழுந்ததால் 2021 சீசனுடன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

- Advertisement -

மனம் திறந்த கெயில்:
அவரை தொடர்ந்து டு பிளேஸிஸ் தலைமையில் ஜெர்சியை மாற்றி புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய அந்த அணி லீக் சுற்றில் அசத்தியும் மீண்டும் பிளே ஆஃப் சுற்றில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. மொத்தத்தில் கடந்த 15 வருடங்களில் எத்தனையோ தரமான வீரர்கள் விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வரும் பெங்களூரு அதிக கிண்டல்களை சந்தித்து வரும் அணியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டில் வெற்றி பெற 11 வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்ற நிலையில் பெங்களூரு அணியில் விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் தமக்கு தான் அதிக கவனம் கொடுக்கப்பட்டதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

அதனால் இதர வீரர்கள் தாங்கள் பெங்களூரு அணிக்கு விளையாடுகிறோம் என்ற உணர்வைப் பெறாமலேயே இருந்ததாக தெரிவிக்கும் அவர் அது தான் அந்த அணி இதுவரை கோப்பை வெல்ல முடியாமல் இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் முதன்மை வீரர்களில் ஒருவராகவும் அணியின் முதன்மையானவராகவும் இருப்பதால் நான் எனக்கான இடத்தில் கச்சிதமாக இருந்தேன். இருப்பினும் பெங்களூரு அணியில் நிறைய வீரர்கள் தங்களை கண்டுகொள்ளாமல் விட்டதாக உணர்ந்ததை நான் புரிந்து கொண்டேன்”

- Advertisement -

“அதாவது நிறைய வீரர்கள் நாம் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறோம் என்ற உணர்வு இல்லாமலேயே விளையாடினார்கள். அத்துடன் அந்த அணியில் எனக்கும், ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகிய 3 பேருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக இதர வீரர்கள் நினைத்தனர். அதனால் நிறைய வீரர்கள் மனதளவில் பெங்களூரு அணியுடன் இணைந்து விளையாடாமல் இருந்தனர். எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த வீரர்கள் விளையாடும் போது கோப்பை வெல்வது மிகவும் சவாலாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : இப்படி ஒரு மேட்சை அடிக்கடி பாக்க முடியாது. வெற்றிக்கு பிறகு – தெனாவட்டாக பேசிய ஸ்டீவ் ஸ்மித்

அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு நட்சத்திர அந்தஸ்து பெற்றதால் தங்களை போன்ற அந்த 3 வீரர்களுக்கு மட்டும் பெங்களூரு அணி நிர்வாகம் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து இதர வீரர்களை கவனிக்காமல் விட்டு விட்டதாக கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். அதனால் இதர வீரர்கள் மனதளவில் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறோம் என்ற உணர்வு இல்லாமல் செயல்பட்டது கோப்பை வெல்ல முடியாமல் போனதற்கான காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் கூறுவது போல 11 வீரர்களும் இணைந்து விளையாடினால் தான் வெற்றி காண முடியும் என்ற நிலைமையில் அது போன்ற மனநிலையுடன் ஓரிரு வீரர்கள் விளையாடினால் கூட நிச்சயம் கோப்பையை வெல்ல முடியாது என்றே கூறலாம்.

Advertisement