IND vs AUS : இப்படி ஒரு மேட்சை அடிக்கடி பாக்க முடியாது. வெற்றிக்கு பிறகு – தெனாவட்டாக பேசிய ஸ்டீவ் ஸ்மித்

Steve-Smith
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தவறவிட்டது. அதனை தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

Virat Kohli

- Advertisement -

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் :

இந்த போட்டி விரைவாக முடிவடைந்தது. இப்படி 37 ஓவர்களில் ஒருநாள் போட்டி முடிவடைவதை நீங்கள் அடிக்கடி பார்க்க முடியாது. எங்கள் அணியைச் சேர்ந்த மிட்சல் ஸ்டார்க் புதுப்பந்தில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியை அழுத்தத்திற்குள் தள்ளினார். இப்படி ஒரு சிறப்பான துவக்கம் எங்களுக்கு கிடைத்ததால் எங்களால் அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.

Starc

இந்த மைதானம் எப்படி செயல்படும் என்று டாசின் போது எனக்கு தெரியவில்லை. அதேபோன்று இந்திய அணி இவ்வளவு குறைவான ரன்களை அடிக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இன்றைய போட்டியில் அனைத்துமே எங்களுக்கு சாதகமாக அமைந்தது. எங்களுடைய வழக்கமான செயல்பாட்டை நாங்கள் இந்த போட்டியில் வெளிப்படுத்தியுள்ளோம்.

- Advertisement -

இந்த போட்டியில் கிடைத்த வெற்றியை கடைசி போட்டியிலும் தொடர விரும்புகிறோம். எங்களது அணி சார்பாக டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி அணியை விரைவாக வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு தற்போது மீண்டும் பதிலளிக்கும் விதமாக நாங்கள் வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ளோம் என ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs AUS : ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறும் சூர்யகுமார் அசத்துவதற்கு அந்த மாற்றத்தை செய்ங்க – ரோஹித்துக்கு டிகே முக்கிய அட்வைஸ்

இப்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ள வேளையில் அடுத்ததாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement