IND vs AUS : ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறும் சூர்யகுமார் அசத்துவதற்கு அந்த மாற்றத்தை செய்ங்க – ரோஹித்துக்கு டிகே முக்கிய அட்வைஸ்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்றாலும் அடுத்ததாக களமிறங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்றும் 2வது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டியில் மிரட்டலாகப் பந்து வீசி இந்தியாவை வெறும் 117 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்று தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் மிட்சேல் ஸ்டார்க்கிடம் எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டான சூரியகுமார் யாதவ் 2வது போட்டியிலும் கொஞ்சம் கூட மாறாமல் அதே போல் முதல் பந்தில் டக் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டான முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனை படைத்துள்ள அவர் இந்தளவுக்கு தடுமாறுவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்து வருகிறது. ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணியை அடித்து நொறுக்கி விரைவாக ரன்களை சேர்க்கும் அவர் விராட் கோலி உள்ளிட்ட இதர வீரர்களை மிஞ்சி இந்தியாவின் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

டிகே ஆலோசனை:
குறிப்பாக எப்படி பந்து வீசினாலும் அனைத்து திசைகளிலும் புதுப்புது ஷாட்களை அடித்து அனைவரையும் வியக்க வைக்கும் அவர் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி இந்தியாவின் மிஸ்டர் 360 என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆனாலும் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு சதம் கூட பதிவு செய்யாமல் 25.47 என்ற மோசமான சராசரியில் பேட்டிங் செய்து வரும் அவர் கடந்த 10 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் அசால்டாக 3 சதங்களை அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தடுமாறுவதால் அதற்கு செட்டாக மாட்டார் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

SUryakumar Yadav 112

இந்நிலையில் எப்போதுமே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை விரும்பும் சூரியகுமார் யாதவ் 4வது பேட்டிங் இடத்திற்கு பதிலாக கடைசி 15 ஓவர்களை மட்டும் அதிரடியாக எதிர்கொண்டு விளையாடும் வகையில் 6வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டுமென தினேஷ் கார்த்திக் வித்தியாசமான ஆலோசனை தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்பை விட தற்போது பொறுப்புடன் விளையாடத் துவங்கியுள்ள ஹர்டிக் பாண்டியாவை 4வது இடத்துக்கு மாற்றி அந்த இடத்தில் சூரியகுமார் விளையாடினால் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருநாள் மட்டுமல்ல டி20 கிரிக்கெட்டிலும் அந்த 2 பந்துகளில் அவர் நிச்சயமாக அவுட்டாகி இருப்பார். ஏனெனில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு அவ்வளவு தரமாக இருந்தது. இந்த 2 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தொடர்ச்சியாகவும் விளையாடவில்லை. ஏனெனில் காயத்தால் வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக பேக் அப் வீரராக தான் அவரை நாம் பயன்படுத்துகிறோம். இருப்பினும் சூர்யாவின் திறமையை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக அவரை வித்தியாசமான இடத்தில் களமிறக்குவது அவருடைய சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் என்று நான் கருதுகிறேன்”

Dinesh-Karthik-1

“மறுபுறம் ஹர்திக் பாண்டியா சமீப காலங்களில் அனுபவத்துடன் பொறுப்பேற்றுக்கொண்டு தனது ஐபிஎல் அணியில் மேல் வரிசையில் களமிறங்குகிறார் அதனால் அவரை 4வது இடத்திலும் சூரியாவை 6வது இடத்திலும் விளையாட வைக்கலாம். ஏனெனில் அந்த இடத்தில் பெரும்பாலும் கடைசி 15 – 18 ஓவர்கள் மட்டும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் அதில் அவர் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க:2008இல் அந்த விஷயத்தில் விராட் கோலியுடன் சச்சின் போட்டி போட்டாரு, அது தான் 100 சதத்தின் ரகசியம் – சேவாக் ஓப்பன்டாக்

“குறிப்பாக உள் வட்டத்திற்குள் 5 அல்லது 4 ஃபீல்டர்கள் இருந்தாலும் அவரால் பவுண்டரிகளை அடித்து கேப்டனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட முடியும். எனவே 14 – 18க்கும் குறைவான ஓவர்களை கொடுக்கும் போது சூரியகுமார் மிகவும் அதிரடியாக செயல்படுவார். ஒருநாள் போட்டிகளில் சூரியகுமார் பேரம் பேச முடியாதவர்” என்று கூறினார்.

Advertisement