2008இல் அந்த விஷயத்தில் விராட் கோலியுடன் சச்சின் போட்டி போட்டாரு, அது தான் 100 சதத்தின் ரகசியம் – சேவாக் ஓப்பன்டாக்

Virender Sehwag
- Advertisement -

மும்பையை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில் அறிமுகமாகி நாளடைவில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்து உலகின் அனைத்து தரமான பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 30000+ ரன்களையும் 100 சதங்களையும் விளாசி இந்தியாவுக்கு ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். பொதுவாக ஒரு போட்டியில் அறிமுகமாகி ஒரு சதமடிக்க திண்டாடும் பல வீரர்களுக்கு மத்தியில் காலத்தை கடந்த காவியத்தலைவனாக 24 வருடங்கள் கிட்டத்தட்ட 3 தலைமுறை எதிரணி பவுலர்களை எதிர்கொண்ட அவர் விளையாடிய போட்டிகளையும் சதங்களையும் சாதனைகளையும் பெற்றுக் கொடுத்த வெற்றிகளையும் திரும்பி பார்க்கும் போது மலைக்க வைக்கும் ஒன்றாக இருக்கிறது.

Sachin

- Advertisement -

ஏனெனில் 24 வருடங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக விளையாடுவதற்கு முதலில் காயங்களை சந்திக்காமல் ஃபார்மை இழக்காமல் தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியமாகும். ஆனால் அந்த இரண்டையுமே தனது கேரியரில் பலமுறை சந்தித்த அவர் அதற்காக மனம் தளராமல் குறுகிய காலத்திலேயே அதிலிருந்து மீண்டெழுந்து முன்பை விட மிகச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தாலேயே இந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்பட முடிந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக 1999க்குப்பின் சந்தித்த டென்னிஸ் எல்போ காயம் அவரை பந்து வீச விடாமல் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

வெற்றியின் ரகசியம்:
அதே போல் 2007 வாக்கில் பார்மை இழந்து ரன்கள் அடிக்க தடுமாறிய அவர் பேசாமல் ஓய்வு பெறலாம் என்ற எண்ணத்தில் இருந்தாலும் கேப்டனாக தோனியின் வருகைக்குப்பின் நல்ல ஆதரவை பெற்று தமக்கு தாமே முன்னேறி 35க்குப்பின் அனுபவத்தால் பல சாதனைகளை படைத்தார். இந்நிலையில் இப்படி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஒவ்வொரு வருடமும் சச்சின் தனது பேட்டிங்கில் புதிய யுக்திகளை உட்படுத்தியதாக தெரிவிக்கும் சேவாக் 2008இல் வந்த விராட் கோலியுடன் போட்டி போடும் அளவுக்கு ஃபிட்னஸை மெயின்டைன் செய்ததாகவும் கூறியுள்ளார்.

அது தான் காலங்களை கடந்து 100 சதங்கள் போன்ற சாதனைகளை படைக்க முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சச்சின் டெண்டுல்கர் எப்படி இவ்வளவு வருடங்கள் விளையாடினார்? என்று நீங்கள் நினைக்கலாம். ஒவ்வொரு வருடமும் அவர் தன்னுடைய பேட்டிங்கில் என்ன புதிய டெக்னிக்கை உட்படுத்தலாம் அல்லது எப்படி தம்மை முன்னேற்றலாம் என்று நினைத்ததே அதற்கு காரணமாகும். ஒருவேளை பேட்டிங்கில் புதியவற்றை உட்படுத்தாவிட்டாலும் என்னுடைய பிட்னஸை சீராக வைத்திருந்தால் மட்டுமே என்னால் 100 ரன்களை 200 ரன்களாக மாற்ற முடியும்”

- Advertisement -

“ஆனாலும் 2000ஆம் ஆண்டில் எங்களைப் போன்ற வீரர்கள் வந்த பின் சச்சின் டெண்டுல்கர் எங்களை விட ஃபிட்னஸ் அம்சத்தில் அதிக கவனம் செலுத்தினார். பின்னர் 2008இல் வந்த விராட் கோலியுடன் அவர் போட்டி போட்டார். அதாவது விராட் கோலியை விட ஃபிட்னஸ்க்கு சச்சின் டெண்டுல்கர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை சொல்கிறேன். ஒருமுறை நாங்கள் 1 கிலோ முதல் 20 கிலோ வரையிலான பளுவை தூக்கினோம். நாங்கள் அந்த ஒவ்வொன்றையும் எடுத்து எங்கள் மணிக்கட்டை 10 முறை வளைக்க வேண்டியிருந்தது. இருப்பினும் 5 – 6 முறை அப்படி செய்த பின் எனக்கு வலிமையில்லை. ஆனால் சச்சின் 1 முதல் 20 கிலோ வரை நிறுத்தாமல் அதை 20 கிலோவிலிருந்து 1 கிலோ வரை செய்தார்”

sehwag-sachin

“அது அவரது முன்னங்கைகளுக்கான பயிற்சி என்பதால் அவரால் எளிதாக எடையுடன் கூடிய பேட்டை பயன்படுத்தி அதிக நேரம் விளையாடியும் சோர்வடையாமல் இருக்க முடிந்தது. ஆனால் எங்களால் 5 கிலோக்கு மேல் தூக்க முடியவில்லை. குறிப்பாக அந்த சமயத்திலேயே 10 – 15000 ரன்களையும் 70 சதங்களையும் அடித்திருந்த அவர் அதை ஏன் செய்ய வேண்டும்? ஏனெனில் அவர் தன்னை ஃபிட்டாக இருக்க விரும்பினார்”

இதையும் படிங்க: IND vs AUS : இப்படி நடந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும். தோல்விக்கு பிறகு – ரோஹித் சர்மா வருத்தம்

“அந்த வகையில் எங்களது அணியில் ஃபிட்டாக இருந்த காரணத்தாலேயே அவரால் 40 வயது முறை விளையாட முடிந்தது. 1999இல் முதுகு பகுதியில் பிரச்சினையை சந்தித்த அவர் அதற்குத் தகுந்த பயிற்சிகளை எடுத்ததால் மீண்டும் அதை சந்திக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement