IND vs AUS : இப்படி நடந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும். தோல்விக்கு பிறகு – ரோஹித் சர்மா வருத்தம்

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 26 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே குவித்தது.

Virat Kohli

- Advertisement -

பின்னர் 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 11 ஓவர்களிலேயே 121 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அவர்கள் இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : எப்பொழுதுமே ஒரு போட்டியை நாம் தோற்கும்போது சற்று வருத்தமாக தான் இருக்கும். இன்றைய போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. இந்த மைதானத்தில் 117 ரன்கள் என்பது போதவே போதாது.

Mitchell-Starc

தொடர்ச்சியாக நாங்கள் விக்கெட்டை இழந்ததால் நாங்கள் நினைத்த அளவு எங்களால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. முதல் ஓவரிலேயே சுப்மன் கில்லை இழந்தோம். ஆனால் அதன் பிறகு நானும் விராட் கோலியும் விரைவாகவே 30 முதல் 35 ரன்கள் குவித்தோம். இருப்பினும் அடுத்து நான் எனது விக்கெட்டை இழந்து விட்டேன்.

- Advertisement -

இப்படி அடுத்தடுத்து இரண்டு விக்கெட் விழுந்த சமயத்திலேயே நாங்கள் போட்டியில் பின்னடைவை சந்தித்தோம். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது சற்று கடினமான ஒன்றுதான். இன்றைய நாள் எங்களுக்கான ஒன்றாக அமையவில்லை. ஸ்டார்க் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்பதை இந்த போட்டியின் மூலம் மீண்டும் வெளிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவிற்கு இனியும் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படுமா? – ரோஹித் சர்மா அளித்த பதில் இதோ

ஆஸ்திரேலிய அணிக்காக புதிய பந்தில் அவரது இந்த பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அவருடைய பலத்திற்கு ஏற்றவாறு அவர் புதுபந்தை நன்றாக ஸ்விங் செய்து வீசினார். இப்படி தொடர்ச்சியாக நாங்கள் விக்கெட்டை இழந்தால் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என ரோகித் சர்மா வருத்தத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement