இந்திய அணிக்காக 150 போட்டி கிட்ட விளையாடியாச்சி. ஆனாலும் என்னோட கனவு இன்னும் நிறைவேறல – சாஹல் ஓபன்டாக்

Chahal
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் 75 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு ஐ.பி.எல் தொடரிலும் 145 போட்டிகளில் பங்கேற்று 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Yuzvendra-Chahal

- Advertisement -

ஒருநாள் மட்டும் டி20 அணியில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் அவர் இன்னமும் தனக்கு நிறைவேறாத ஒரு கனவு இருக்கிறது என்றும் அது குறித்த சில கருத்துக்களையும் தற்போது அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தங்களது தேசிய அணிக்காக சர்வேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அந்த வகையில் எனக்கும் அந்த ஆசை இருந்தது. ஒர நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நான் விளையாடியிருந்தாலும் இந்திய அணிக்காக வெள்ளை நிற ஜெர்சி அணிந்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் அதுதான் என்னுடைய கனவு.

Chahal

குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் நான் சாதித்து விட்டேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் எதுவுமே செய்யவில்லை. எனவே இனிவரும் காலங்களில் நிச்சயம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடு வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து வருவதாக தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 150 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறுவதற்காகவே உள்ளூர் மற்றும் ரஞ்சி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாட முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் பணம் போதுமா? அவர கேப்டனா போட்ட உங்களுக்கு எந்த நாலேஜூம் இல்ல – தேர்வுக்குழு, பிசிசிஐயை வெளுத்த வெங்சர்க்கார்

ஆனால் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் நிரம்பி வழிவதால் இவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Advertisement