ஐபிஎல் பணம் போதுமா? அவர கேப்டனா போட்ட உங்களுக்கு எந்த நாலேஜூம் இல்ல – தேர்வுக்குழு, பிசிசிஐயை வெளுத்த வெங்சர்க்கார்

Dilip Vengsarkar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் வெற்றி காண முடியாமல் வெறும் கையுடன் நாடு திரும்பியது. அந்த போட்டியில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தாமல் கேப்டன் ரோஹித் சர்மா தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் சூப்பர் ஸ்டார்களாக கொண்டாடப்படும் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா போன்றவர்கள் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

அது போக ஐபிஎல் தொடரில் ஒரு நாளில் வரும் 4 ஓவர்களை மட்டும் வீசிய இந்திய பவுலர்கள் 10 நாட்கள் முன்பாக இங்கிலாந்துக்கு பயணித்து அங்குள்ள கால சூழ்நிலைகளுக்கு முழுமையாக தயாராகாமல் நேரடியாக ஃபைனலில் களமிறங்கிய திடீரென ஒரே நாளில் 17 ஓவர்கள் வரை சோர்வுடன் வீசி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் வாரி வழங்கிய போதே தோல்வி உறுதியானது. மொத்தத்தில் கடந்த 10 வருடங்களில் ஐசிசி தொடர்களின் சந்தித்த தோல்வியிலிருந்து பாடங்களை கற்காத இந்தியா எந்த மாற்றத்தை முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை என்பதை இந்த தோல்வி மீண்டும் நிரூபித்துள்ளது.

ஐபிஎல் பணம் போதுமா:
அதன் காரணமாக சாதாரண இருதரப்பு தொடர்களில் கத்துக்குட்டி அணிகளை அடித்த நொறுக்கி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் இந்தியாவையும் அதற்காக விளையாடி சொந்த சாதனைகளை மட்டும் படைக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களையும் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் மட்டுமல்லாமல் கடந்த 6 – 7 வருடங்களாகவே தொலைநோக்கு பார்வையில்லாமல் தேர்வு குழுவினர் செயல்படுவதே இந்த தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம் என்று முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்க்கார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Jay-Shah

எடுத்துக்காட்டாக ஒரே கேப்டன் தலைமையில் நிலையான அணியை விளையாட வைத்து செட்டிலாக்கும் வேலையை செய்யாத தேர்வு குழு இடையிடையே சிக்கிர் தவான் போன்ற வீரர்களை பொழுதுபோக்குக்காக நியமித்தால் எப்படி வருங்காலம் சிறப்பாக அமையும் என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் தேர்வு குழுவினருக்கு ஆழமான அடிப்படை கிரிக்கெட் அறிவும் தொலைநோக்கு பார்வையும் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த 6 – 7 வருடங்களில் தேர்வுக் குழுவினரிடம் தொலைநோக்கு பார்வையும் ஆழமான கிரிக்கெட் அறிவும் அல்லது நுணுக்கங்களும் இல்லாமல் இருப்பதை நான் பார்ப்பது துரதிஷ்டவசமாகும். குறிப்பாக வெளிநாட்டு தொடர்கள் வரும் போதும் முதன்மை வீரர்கள் இல்லாத போதிலும் அவர்கள் ஷிகர் தவானை கேப்டனாக நியமித்தனர். இவ்வாறு தான் அவர்கள் வருங்கால இந்திய கேப்டனை உருவாக்குகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகும்” என்று கூறினார்.

dilip

அதை விட கடந்த ஃபைனலில் முழுமையாக தயாராமல் களமிறங்கியதால் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியில் எந்த பாடத்தையும் கற்காத பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு போதிய நேரத்தை கொடுக்காமல் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பச்சைக்கொடி காட்டியதையும் திலிப் வெங்சர்க்கார் விமர்சித்துள்ளார். குறிப்பாக நாட்டை விட ஐபிஎல் தொடரில் ஒளிபரப்பு உரிமத்தால் கிடைக்கும் ஆயிரக்கணக்கான கோடிகள் தான் முக்கியமா என்று விளாசும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:ஜெயிச்ச சந்தோஷத்துல அப்படி பண்ணிட்டேன். இப்போ அது தப்புனு புரிஞ்சிக்கிட்டேன் – மனம்திறந்த ஆவேஷ் கான்

“நீங்கள் வருங்காலத்தை கருத்தில் கொண்டு யாரையும் வளர்க்கவில்லை. மாறாக வளர்ந்து வருபவர்களை அப்படியே விளையாடுகிறீர்கள். மேலும் இந்தியா உலகின் மிகவும் பணக்கார வாரியம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உங்களுடைய பெஞ்சில் இருக்கும் வீரர்களின் பலம் என்ன? நீங்கள் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு ஒப்பந்தத்தால் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாக சம்பாதிப்பதை மட்டும் சாதனையாக பார்க்க கூடாது” என்று கூறினார்.

Advertisement