IND vs WI : முதல் இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை செய்ய காத்திருக்கும் – யுஸ்வேந்திர சாஹல்

Yuzvendra-Chahal-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

அதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஆகஸ்ட் 6-ஆம் தேதி கயானா நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி யுஸ்வேந்திர சாஹல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த சாதனையை அவர் இந்த தொடரிலேயே செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி கடந்த 2016-ஆம் ஆண்டு டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சாஹல் இதுவரை 76 டி20 போட்டிகளில் பங்கேற்று 93 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலராக முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், அஸ்வின் 72 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோர் 70 விக்கெட்டுகளுடன் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் யுஸ்வேந்திர சாஹல் இந்த தொடரில் மேலும் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

இதையும் படிங்க : தோனியின் 8 வயது மகளுடைய ஒரு வருட ஸ்கூல் பீஸ் எவ்வளவு தெரியுமா? – பாத்தா ஆச்சரியப்படுவீங்க

அவரை தவிர்த்து டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக பங்களாதேஷ் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷாஹிப் அல் ஹசன் 140 விக்கெட்களுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 134 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், ரஷீத் கான் 130 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement