தோனியின் 8 வயது மகளுடைய ஒரு வருட ஸ்கூல் பீஸ் எவ்வளவு தெரியுமா? – பாத்தா ஆச்சரியப்படுவீங்க

MS Dhoni CSK Ruturaj
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். ஐபிஎல் வருமானம், விளம்பர வருமானம், தொழில் வருமானம் என ஆண்டிற்கு பல கோடி ரூபாயை சம்பாதிக்கும் தோனியின் மொத்த சொத்து மதிப்பு ஆயிரம் கோடிகளை தாண்டியதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

ஐபிஎல் தொடரிலிருந்து வரும் வருமானத்தை தவிர்த்து தற்போது பல்வேறு வகையில் தோனி வருமானத்தை ஈட்டி வருகிறார். ராஞ்சியில் ஒரு பெரிய பண்ணை வீடு கட்டி அதில் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அவர் அதிக வருமானத்தை ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தோனியின் மகள் ஸீவா தோனி படிக்கும் பள்ளியின் ஒரு வருட ஸ்கூல் ஃபீஸ் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் சாக்ஷியை காதலித்து வந்த தோனி 2010-ஆம் ஆண்டு குடும்பத்தினர் முன்னிலையில் அவரை திருமணமும் செய்து கொண்டார்.

அதன் பிறகு நட்சத்திர ஜோடியாக வலம் வந்த தோனி மற்றும் சாக்சி தோனி ஆகியோருக்கு 2015-ஆம் ஆண்டு ஸீவா பிறந்தார். அவர் பிறந்த போது தோனி உலக கோப்பை தொடரில் பங்கேற்று இருந்ததால் அந்த தொடர் முடிவடைந்த பின்னரே அவரது குழந்தையை பார்க்க வந்தது அப்போது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 8 வயதை எட்டியுள்ள ஸீவா ராஞ்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளி (டாரியன்) ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது பள்ளி கட்டணம் மட்டும் ஒரு ஆண்டிற்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் 23 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs WI : இந்தியா வெல்லுமா – 2வது டி20 நடக்கும் ப்ரோவிடன்ஸ் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

மேலும் இந்த ஆண்டு கட்டணத்தை தவிர்த்து கூடுதலாக சில கட்டணங்களும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோன்று அந்தப் பள்ளியில் போர்டிங் முறையில் படித்தால் ஆண்டு ஒன்றுக்கு 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement