IND vs WI : இந்தியா வெல்லுமா – 2வது டி20 நடக்கும் ப்ரோவிடன்ஸ் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. குறிப்பாக 2024 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா 150 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது. மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் இன்னும் நாங்கள் வீழ்ந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் வெற்றி கண்ட வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்தது.

அதே வேகத்தில் 2வது போட்டியிலும் சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் வென்று முன்னிலையை அதிகரிக்க வெஸ்ட் இண்டீஸ் தயாராகியுள்ளது. அதற்கு தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஐபிஎல் தொடரில் அசத்தி நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை கொண்டுள்ள இந்தியா முதல் போட்டியில் கற்ற பாடங்களுடன் வெற்றியை பெற்று பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் பந்து வீச்சு சிறப்பாக இருந்த போதிலும் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா வெற்றி காண்பதற்கு இம்முறை அதில் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

ப்ரோவிடன்ஸ் மைதானம்:
அதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு கயானாவில் உள்ள ஜார்ஜ்டவுன் நகரில் இருக்கும் ப்ரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த 2006இல் 20000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் இதுவரை வரலாற்றில் 11 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன.

1. அதில் 7 போட்டிகளில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3 போட்டிகளில் வெற்றியும் 2 தோல்வியையும் சந்தித்த நிலையில் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இம்மைதானத்தில் கடந்த 2019இல் முதலும் கடைசிமாக களமிறங்கி வெஸ்ட் இண்டீஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா அதன் பின் இப்போது தான் 2வது முறையாக விளையாட உள்ளது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களாக ரிஷப் பண்ட் 65, விராட் கோலி 59 ரன்களுடன் இருக்கும் நிலையில் அதிக விக்கெட்கள் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக தீபக் சஹர் (3/4) உள்ளார். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 150/3, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2019.

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் ஜார்ஜ்டவுன் நகரில் போட்டி நாளன்று உள்ளூர் நேரப்படி 11 மணி முதல் 2 மணி வரை 40% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. இருப்பினும் அது 50க்கும் குறைவான சதவீதத்துடன் இருப்பதால் இந்த போட்டியை பெரிய அளவில் மழை பாதிக்காது என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
முதல் போட்டியை போலவே இப்போட்டி நடைபெறும் ப்ரோவிடன்ஸ் மைதானமும் பேட்டிங்க்கு மிகவும் சவாலாக இருந்து வருகிறது. ஏனெனில் வரலாற்றில் இங்கு முடிவு கிடைத்த 8 டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி ஸ்கோர் வெறும் 146 ரன்களாகும். அத்துடன் மொத்தமாக இங்கு நடைபெற்ற 11 டி20 போட்டிகளில் அடிப்படையில் 7.32 என்ற ரன் ரேட்டில் மட்டுமே இங்கு ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு சராசரியாக பேட்ஸ்மேன்கள் ஒரு விக்கெட்டுக்கு 22 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். அதனால் இந்த போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் அதிரடியாக ரன்களை குவிப்பதற்கு தடுமாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மறுபுறம் வேகத்தை குறைத்து நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றும் மித வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு பெரிய சவாலை கொடுத்து விக்கெட்டுகளை எடுப்பார்கள். அதற்கு நிகராக ஸ்பின்னர்களும் தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பார்கள்.

இதையும் படிங்க:IND vs WI : இந்தியா வெல்லுமா – 2வது டி20 நடக்கும் ப்ரோவிடன்ஸ் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

எனவே அதை சமாளித்து நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களையும் குவிக்கலாம். அத்துடன் இங்கு வரலாற்றில் நடைபெற்ற 8 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 வெற்றியும் சேசிங் செய்த அணி 4 வெற்றிகளையும் கண்டுள்ளன. எனவே டாஸ் வென்று எந்த முடிவை எடுத்தாலும் இங்குள்ள சூழ்நிலைகளை புரிந்து அதற்கேற்றார் போல் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement