சின்ன வயசுல பாஸ்ட் பவுலரா இருந்த நான் லெக் ஸ்பின்னரா மாற காரணமே இவர்தான் – மனம்திறந்த யுஸ்வேந்திர சாஹல்

Yuzvendra-Chahal
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 72 ஒருநாள் போட்டியில் விளையாடி 121 விக்கெட்டுகளையும், 75 டி20 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்துகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் 2013-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 145 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Chahal

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐ.பி.எல் தொடரிலும் சரி விக்கெட்டுகளை கைப்பற்றும் விக்கெட் டேக்கராக பார்க்கப்படும் யுஸ்வேந்திர சாஹல் தனது ஆரம்ப காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்ததாகவும் அதன்பிறகு எப்படி சுழற்பந்து வீச்சாளராக மாறினேன் என்பது குறித்தும் தனது நினைவுகளை தற்போது ஒரு பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் என்னுடைய சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது வேகப்பந்து வீச்சாளராகவே இருந்தேன். நான் ஆறு-ஏழு வயதில் இருக்கும்போதே கிரிக்கெட் விளையாட துவங்கி விட்டேன். அப்போது வேகப்பந்து வீச்சாளராகவே இருந்தேன். அந்த நேரத்தில் எனது அப்பா யுனிவர்சிட்டி அளவில் கிரிக்கெட் விளையாடி வந்தார்.

Chahal and Dad

அதுமட்டுமின்றி ஒரு ஐந்து வருடம் அவர் கேப்டனாகவும் இருந்துள்ளார். அவர்தான் எனது பந்துவீச்சை பார்த்துவிட்டு உன்னால் வேகப்பந்து வீச்சாளராக இந்த உடல் அமைப்பை வைத்து சக்சஸ் ஃபுல்லாக இருக்க முடியாது என்றும் சுழற்பந்து வீச்சாளராக மாறும் படியும் கூறினார். அதன்பிறகு நான் என்னுடைய எட்டு வயதிலிருந்து லெக் ஸ்பின்னராக இருந்து வருகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : அவர் நிலையான இடம் புடிச்சுட்டாரு, அவங்க எல்லாருக்கும் ரோஹித் மாஸ் பதிலடி கொடுத்துருக்காரு – இளம் வீரருடன் ஹர்பஜன் பாராட்டு

ஹரியானா அணிக்காக முதல்முறையாக நான் 14 வயதுக்குட்பட்டோர் அணியில் 10 வயதில் விளையாடினேன். அப்போதிலிருந்து தற்போது 23 வருடங்களாக லெக் ஸ்பின்னராகவே இருந்து வருகிறேன் என்று சாஹல் கூறினார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவர் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே தன்னுடைய ஆசை என்று அவர் பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement