அவர் நிலையான இடம் புடிச்சுட்டாரு, அவங்க எல்லாருக்கும் ரோஹித் மாஸ் பதிலடி கொடுத்துருக்காரு – இளம் வீரருடன் ஹர்பஜன் பாராட்டு

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவக்கி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா எதிர்பார்த்தது போலவே பலவீனமாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸை வெறும் இரண்டரை நாட்களில் அதன் சொந்த மண்ணில் சுருட்டி அதிரடியான வெற்றி பெற்றது.

Yashasvi Jaiswal

- Advertisement -

அந்த வெற்றிக்கு அறிமுக போட்டியில் 171 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக முதல் பந்திலேயே பவுண்டரியை அடித்து அட்டகாசமாக தம்முடைய கேரியரை துவக்கிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மதிப்பளித்து மிகச் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி அறிமுக போட்டியிலேயே சதமடித்த 17வது இந்திய வீரர், அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் மற்றும் வெளிநாட்டு மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் போன்ற பல்வேறு சாதனைகளையும் படைத்து அசத்தினார்.

ஹர்பஜன் பாராட்டு:
பானி பூரி விற்பவரின் மகனாக அடிமட்டத்திலிருந்து போராடி வந்த அவர் 2020 அண்டர்-19 உலக கோப்ப்பையில் அதிக ரன்கள் (400) அடித்த வீரராக இந்தியாவை ஃபைனலுக்கு அழைத்துச் சென்று ரஞ்சி, விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி போன்ற 3 விதமான உள்ளூர் தொடர்களிலும் சதமடித்து அசத்தினார். அதை விட இந்த வருட ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் (625) குவித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சாதனையும் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற சரித்திரமும் படைத்த காரணத்தால் இந்தியாவுக்காக அறிமுகமாகியுள்ள அவர் அதில் சதமடித்து அந்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்துள்ளார் என்றே சொல்லலாம்.

Jaiswal IND vs WI

இந்நிலையில் அந்தப் போட்டியில் இரட்டை சத்தத்தை தவறவிட்டாலும் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடும் அளவுக்கு ஜெய்ஸ்வால் அசத்தியுள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அவருக்கு தம்முடைய ஆலோசனைகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். மேலும் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு வருவதாக சந்தித்த விமர்சனங்களுக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கியதுமே ஜெய்ஸ்வால் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அப்போட்டியில் இரட்டை சத்தத்தை தவறவிட்டாலும் அவர் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடும் அளவுக்கு தம்முடைய திறமையை வெளிப்படுத்தினார் என்று நான் கருதுகிறேன். அந்த வகையில் திறமையில் எந்த குறையும் இல்லாத அவருக்கு என்னுடைய ஆலோசனை என்னவெனில் “கடினமாக உழையுங்கள். ஏனெனில் நீங்கள் இந்த உலகை ஆள்வதற்கு வந்துள்ளீர்கள்” என்பதாகும். அதே போல் கடந்த 2 – 3 வருடங்களாக ரோகித் சர்மா சரியாக ரன்கள் அடிக்கவில்லை என்ற விமர்சனங்கள் இருக்கிறது”

Harbhajan

“எனவே அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விராட் கோலியும் நல்ல 76 ரன்கள் எடுத்தார். இருப்பினும் ரசிகர்களைப் போலவே சதத்தை தொடாமல் போனதற்காக அவர் ஏமாற்றத்துடன் இருப்பார். எனவே அவர் விரைவில் சதமடிப்பதை பார்க்க நானும் காத்திருக்கிறேன். இந்த தொடரை பொறுத்த வரை 2 – 0 என்ற கணக்கில் இந்தியா எளிதாக வேண்டும் என்று கருதுகிறேன்”

இதையும் படிங்க:வருங்காலத்தையும் பாருங்க – அஸ்வின், ஜடேஜாவுடன் சேர்ந்து அவரும் டெஸ்ட் அணியில் இருக்கணும் – அனில் கும்ப்ளே கோரிக்கை

“மேலும் அடுத்த போட்டியில் இந்திய வீரர்கள் நல்ல ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுத்து தங்களுடைய ஃபார்மை தொடர்வார்கள் என்று நம்புகிறேன். இது அவர்களுக்கு அடுத்து வரும் தொடர்களில் சிறப்பாக செயல்பட உதவும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து வரும் ஜூலை 20ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இத்தொடரின் 2வது போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement