இந்த 2 முன்னாள் இந்திய வீரர்களில் ஒருவர்தான் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் – ஜெய் ஷா கொடுத்த ஹின்ட்

Jay-Shah-Coach
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கும் அவர் அந்த தொடர் முடிவடைந்து அந்த பதவியில் இருந்து விலக உள்ளார்.

மேலும் தொடர்ந்து தான் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்து விட்டதால் அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் பி.சி.சி.ஐ ஏற்கனவே இறங்கிவிட்டது. அதன்படி மார்ச் 27-ஆம் தேதி வரை புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்று ஏற்கனவே பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது.

- Advertisement -

பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த பதவிக்காக விண்ணப்பித்து வருகின்றனர். அது தவிர்த்து இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யும் தனிப்பட்ட முறையில் சில முன்னாள் ஜாம்பவான் வீரர்களிடம் இந்த பயிற்சியாளர் பதவி குறித்து பேசி வருவதாகவும் சில தகவல்கள் வெளியாக்கின.

அதன்படி வெளியான தகவலில் ஏகப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்த வேளையில் தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா : “இந்த பயிற்சியாளர் பதவிக்கு நாங்கள் எந்தவொரு வெளிநாட்டு முன்னாள் வீரர்களையும் தாங்கள் அணுகவில்லை” என்றும் சரியான நபரை இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்வோம் என்றும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதோடு இந்திய அணியை நன்கு புரிந்த, வீரர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு நபரே பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறி உள்ளதால் நிச்சயம் முன்னாள் இந்திய வீரர்களுக்கே இந்த பயிற்சியாளர் பதவி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போதைக்கு கௌதம் கம்பீர் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகிய இரண்டு பேரில் ஒருவர்தான் அடுத்த பயிற்சியாளராக மாற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பாண்டியாவை கேப்டனா ஏத்துக்காத ரசிகர்கள் ருதுராஜை கேப்டனா ஏத்துக்கிட்டது ஏன் தெரியுமா? – காசி விஸ்வநாதன் விளக்கம்

ஏனெனில் கௌதம் கம்பீரின் தலைமையில் ஏற்கனவே கொல்கத்தா அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அதோடு லக்னோ அணியின் மென்டராக செயல்பட்ட அவரது தலைமையில் இரண்டு ஆண்டுகளிலுமே அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். அது மட்டுமின்றி தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருக்கும் அவர் கொல்கத்தா அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்றுள்ளார். அதனால் அவர் இந்த போட்டியில் இருப்பார் என்று தெரிகிறது. அதேபோன்று ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக சிறப்பாக பணியாற்றி வரும் ஆஷிஷ் நெஹ்ராவும் புதிய பயிற்சியாளருக்கான போட்டியில் இருப்பார் என்று தெரிகிறது.

Advertisement