பாண்டியாவை கேப்டனா ஏத்துக்காத ரசிகர்கள் ருதுராஜை கேப்டனா ஏத்துக்கிட்டது ஏன் தெரியுமா? – காசி விஸ்வநாதன் விளக்கம்

Kasi-Captain
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை கோப்பையை வென்று அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான மும்பை அணியுடன் சென்னை அணியும் முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்று ஆறாவது கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே இறுதியில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் ஏமாற்றத்தையே அளித்திருந்தது.

இருப்பினும் நல்ல ரன் ரேட்டுடன் ஏழு வெற்றிகளை பெற்று இந்த தொடரில் ஐந்தாவது இடத்தை பிடித்து சிஎஸ்கே வெளியேறி இருந்தது. ஆனால் மறுபுறம் மும்பை அணி கடைசி இடத்தினை பிடித்து மோசமான நிலையுடன் இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

குறிப்பாக பாண்டியா தலைமையிலான மும்பை அணி இந்த தொடரின் ஆரம்பம் முதலே பல்வேறு விமர்சனங்களை சந்தித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பையும் சம்பாதித்தது. அதற்கு காரணம் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு பாண்டியா கேப்டனானதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.

அதே நேரத்தில் சென்னை அணியிலோ ருதுராஜ் கெய்க்வாட் தோனிக்கு பதிலாக புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அதனை ரசிகர்கள் மனதார ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவினை வழங்கி வந்தனர். இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டை சி.எஸ்.கே அணியின் கேப்டனாக நியமித்தது ஏன்? என்பது குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சி.எஸ்.கே அணி நிர்வாகத்தின் கீழ் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாட துவங்கிய போது அடுத்த கேப்டனாக அவர் வருவார் என்று பேச தொடங்கினோம். அதோடு தோனி மற்றும் பிளமிங் ஆகியோர் அவரிடம் ஏராளமான ஆலோசனை நடத்தி அவரை முறைப்படி இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க : கனவு நிஜமாகிருக்கு.. அப்பாவிடம் கத்துக்கிட்டேன்.. இதான் எங்களோட மெசேஜ்.. அபிஷேக் சர்மா பேட்டி

நிச்சயம் இந்த ஆண்டு அவர் அணியை சிறப்பாக வழிநடத்தி உள்ளார். அதோடு தோனி தான் அவரை கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். அதனாலே ரசிகர்கள் அவரை எளிதாக அடுத்த கேப்டனாக ஏற்றுக் கொண்டனர் என காசி விஸ்வநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement