வருங்காலத்தையும் பாருங்க – அஸ்வின், ஜடேஜாவுடன் சேர்ந்து அவரும் டெஸ்ட் அணியில் இருக்கணும் – அனில் கும்ப்ளே கோரிக்கை

Anil Kumble
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அந்தப் போட்டியில் அறிமுகமாக வாய்ப்பு பெற்ற யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 171 ரன்கள் குவித்து நிறைய சாதனைகளை படைத்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

அவருக்கு நிகராக 12 விக்கெட்களை சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸை வெறும் இரண்டரை நாட்களில் சுருட்ட முக்கிய பங்காற்றி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அந்த வகையில் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் என்னை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தேர்வு செய்யாமல் தவறு செய்து விட்டீர்களே என்று இந்திய அணி நிர்வாகம் வருந்தும் அளவுக்கு அசத்திய அவர் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். அதே போல மொத்தமாக 5 விக்கெட்டுகளை சாய்ந்த ரவீந்திர ஜடேஜா வெஸ்ட் இண்டீஸ் கொஞ்சமும் நிம்மதியுடன் விளையாட முடியாத அளவுக்கு பெரிய அச்சுறுத்தலை கொடுத்து வெற்றியில் பங்காற்றினார்.

கும்ப்ளே கோரிக்கை:
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய ஸ்பின்னர்களுடன் வருங்காலத்தை கருத்தில் கொண்டு குல்தீப் யாதவும் இந்திய அணியில் இருக்க வேண்டுமென்று ஜாம்பவான் அனில் கும்ப்ளே கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது 28 வயதாகும் அவர் கடந்த 2017இல் அறிமுகமாகி வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணிகளை திணறடித்து சிறப்பாகவே செயல்பட்டார்.

Kuldeep Yadav 1

குறிப்பாக 2019 சிட்னி டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அஸ்வினையே பின்னுக்கு தள்ளி அப்போதைய விராட் கோலி – ரவி சாஸ்திரி ஆகியோரின் ஆதரவால் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்த அவர் அதன் பின் ஃபார்மை இழந்து ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டு 2021 டி20 உலக கோப்பையில் தேர்வாகவில்லை. இருப்பினும் இந்த வருட ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் சிறப்பாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் கடந்த டிசம்பரில் நடைபெற்ற வங்கதேச டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றும் அடுத்த போட்டியிலேயே மனசாட்சியின்றி நீக்கப்பட்டது உச்சகட்ட விமர்சனங்களை எழுப்பியது.

- Advertisement -

இருப்பினும் லெக் ஸ்பின்னராக இருக்கும் அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து வளர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் கும்ப்ளே இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “மிகவும் நல்ல பவுலரான அவர் நிச்சயமாக அணியில் இருக்க வேண்டும். ஏனெனில் லெக் ஸ்பின்னர்கள் எப்போதுமே ரன்கள் கொடுத்தாலும் அட்டாக் செய்பவர்களாக இருப்பதுடன் எதிர்கொள்வதற்கு கடினமானவர்கள். எனவே சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவரை போன்ற லெக் ஸ்பின்னரை நீங்கள் வாய்ப்பளித்து வளர்க்க வேண்டும்”

kumbley

“குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் மிகச்சிறந்த ஸ்பின்னராக பொருந்துவார். சொல்லப்போனால் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவர் மிகச் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். பொதுவாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நிறைய மணிக்கட்டு ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை நம்மால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அதிகம் பார்க்க முடிவதில்லை. அந்த வகையில் தற்சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக பங்காற்றி வருகிறார்கள்”

இதையும் படிங்க:நீங்க வேணா பாருங்க இன்னும் 8 – 10 மாசத்துல அந்த பையன் 3 பார்மேட்டிலும் கலக்குவான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

“அந்த இருவரும் உயர்தரமான ஸ்பின்னர்கள். மேலும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் 3வது ஸ்பின்னராக அக்சர் பட்டேலும் அசத்தியுள்ளார். இருப்பினும் இப்போதே நீங்கள் சமயம் கிடைக்கும் போது குல்தீப் யாதவை இந்திய அணியில் சேர்த்து வாய்ப்பு கொடுத்து வளர்க்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல அஸ்வின் மற்றும் ஜடேஜா சராசரியாக 35 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 28 வயதாகும் அவருக்கு வாய்ப்பளித்து வளர்ப்பது நல்ல முடிவாக இருக்கும் என்றே சொல்லலாம்.

Advertisement