இந்திய அணியில் எல்லாரும் சூப்பர்ஸ்டாரா இருக்காங்கன்னு.. அதை செய்ய மறந்துடாதீங்க.. ட்ராவிட்டை எச்சரித்த லாரா

Brian Lara 4
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழக வீரர் நடராஜன், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படாதது நிறைய விமர்சனங்களை எழுப்பியது.

மற்ற படி அந்த அணியில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற நிறைய நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்ட வீரர்கள் முதல் முறையாக இந்தியாவுக்காக தேர்வாகியுள்ளனர். எனவே தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா 2007க்குப்பின் இம்முறை கோப்பையை வென்று சாதனை படைக்கப் போராட உள்ளது.

- Advertisement -

லாரா அட்வைஸ்:
இந்நிலையில் இந்திய அணியில் முழுவதுமாக அனுபவமிக்க சூப்பர் ஸ்டார் வீரர்கள் நிறைந்திருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா பாராட்டியுள்ளார். எனவே அனுபவமிக்க வீரர்கள் வேலையை பார்த்துக் கொள்வார்கள் என்ற அஜாக்கிரத்துடன் இல்லாமல் கோப்பையை வெல்வதற்கான திட்டத்தை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சரியாக வகுக்க வேண்டுமென லாரா எச்சரிக்கையுடன் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“சில நேரங்களில் உங்கள் அணியில் நிறைய சூப்பர் ஸ்டார்கள் இருக்கும் போது நீங்கள் திட்டமிடுவதற்கு மறந்து விடுவீர்கள். ஏனெனில் சூப்பர் ஸ்டார் வீரர்கள் வேலையை செய்து விடுவார்கள் என்று நீங்கள் நம்புவீர்கள். அதனால் விராட் கோலி அல்லது விவ் ரிச்சர்ட்ஸ் போன்றவர்களிடம் ஒரு பயிற்சியாளராக நீங்கள் எதையும் சொல்ல மாட்டீர்கள். ஏனெனில் அவர்களிடம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும்”

- Advertisement -

“அது போன்ற வீரர்கள் உங்களிடம் இருக்கும் போது அவர்களுடைய அனுபவத்துக்கு நீங்கள் மதிப்பளிப்பீர்கள். ஏனெனில் அவர்களால் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியும் என்று நீங்கள் கருதுவீர்கள். அதில் தவறில்லை. உங்களிடம் நிறைய இளம் வீரர்கள் வந்துள்ளனர். அதையும் நீங்கள் பார்க்க வேண்டும். இந்தியா அனுபவம் மிகுந்த அணியாக உள்ளது”

இதையும் படிங்க: 2025இல் மதிக்காத மும்பையிலிருந்து வெளியேறி.. ரோஹித் அந்த ஐபிஎல் டீம்ல விளையாடுவாரு.. வாசிம் அக்ரம் கருத்து

“எனவே ராகுல் டிராவிட் சரியான திட்டத்தை வைத்திருக்கிறோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இது என்னுடைய ஆலோசனையே தவிர விமர்சனம் கிடையாது. இந்த அணியிடம் உலகக் கோப்பையை வெல்வதற்கான திறன் இருக்கிறது. சூழ்நிலையால் சில இளம் வீரர்கள் இந்திய அணியில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் இப்போதும் கோப்பையை வெல்வதற்கு சரியான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.

Advertisement