2025இல் மதிக்காத மும்பையிலிருந்து வெளியேறி.. ரோஹித் அந்த ஐபிஎல் டீம்ல விளையாடுவாரு.. வாசிம் அக்ரம் கருத்து

Wasim Akram 5
- Advertisement -

கோடைகாலத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. குறிப்பாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட அந்த அணி ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கி கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்தது.

அந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏராளமான மும்பை ரசிகர்களே இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். மறுபுறம் கேப்டன்ஷிப் பொறுப்பு கைக்கு வந்ததும் சீனியர் என்று பார்க்காமல் ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு ஹர்திக் பாண்டியா வற்புறுத்தினார். அதனால் கோபமடைந்த மும்பை ரசிகர்கள் தங்களுடைய கேப்டன் என்று பார்க்காமல் தொடர்ந்து பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மும்பைக்கு டாட்டா:
அந்த சூழ்நிலையில் ஹைதராபாத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரோஹித் சர்மா வெறும் இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறங்கினார். இம்பேக்ட் வீரர் விதிமுறை என்பது ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாக சமீபத்தில் ரோகித் சர்மா விமர்சித்திருந்தார். அதிலிருந்தே அந்த விதிமுறைக்கு அவர் எதிராக இருப்பது தெளிவாகத் தெரிந்தது. அதை வைத்து ரோஹித் சர்மாவை வலுக்கட்டாயமாக இம்பேக்ட் வீரராக பாண்டியா தலைமையான மும்பை அணி களமிறக்கியதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அதனால் 5 கோப்பைகளை வென்று கொடுத்த நன்றியை மறந்த மும்பை நிர்வாகம் மீண்டும் மீண்டும் ரோகித் சர்மாவை அவமானப்படுத்தி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். எனவே இந்த வருடத்துடன் மும்பையிலிருந்து வெளியேறி அவர் வேறு ஐபிஎல் அணியில் விளையாட வேண்டும் என்பதே பல ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் கண்டிப்பாக அடுத்த வருடம் மும்பை அணியில் ரோஹித் விளையாட மாட்டார் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அது போன்ற சூழ்நிலையில் கொல்கத்தா அணியில் ரோஹித் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அடுத்த ஐபிஎல் சீசனில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்க மாட்டார் என்று எனக்கு ஒரு உணர்வு இருக்கிறது. அவரை நான் கொல்கத்தா அணியில் பார்க்க விரும்புகிறேன். கம்பீர் ஆலோசகராகவும் ஸ்ரேயாஸ் கேப்டனாகவும் உள்ள அந்த அணியில் ரோகித் ஓப்பனிங்கில் விளையாடுவதாக நினைத்துப் பாருங்கள்”

இதையும் படிங்க: 6 மேட்ச்ல 13 விக்கெட்ஸ்.. இதான் என்னோட வாழ்க்கை.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு திருப்பி கொடுப்பேன்.. பதிரனா உருக்கம்

“அவர்களிடம் ஏற்கனவே ஈடன் கார்டனஸ் கிரிக்கெட் மைதானத்திற்கு தகுந்த வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது. அங்குள்ள பிட்ச்சில் சிறந்த வீரரான ரோகித் நன்றாக பேட்டிங் செய்வார். எனவே அவர் கொல்கத்தா அணியில் விளையாடுவதை பார்ப்பது நன்றாக இருக்கும்” என்று கூறினார். சொல்லப்போனால் அடுத்த வருடம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. எனவே ரோகித் சர்மாவை மொத்தமாக மும்பை கழற்றி விடுவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement