6 மேட்ச்ல 13 விக்கெட்ஸ்.. இதான் என்னோட வாழ்க்கை.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு திருப்பி கொடுப்பேன்.. பதிரனா உருக்கம்

Matheesa Pathirana 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 11 போட்டியில் 6 வெற்றி 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனா காயத்தால் விலகுவதாக அறிவித்துள்ளது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

ஏனெனில் ஜாம்பவான் மலிங்கா போல ஸ்லிங்கா ஆக்சனை பயன்படுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்கும் அவர் கடந்த வருடம் 19 விக்கெட்டுகளை எடுத்து சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதே போல இந்த வருடம் 6 போட்டிகளில் 13 விக்கெட் எடுத்த அவர் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

ரசிகர்களுக்கு நன்றி:
இருப்பினும் அதன் பின் காயத்தை சந்தித்ததால் முழுமையாக விளையாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அவர் முன்னதாகவே சென்னை அணியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இந்த வருடம் முழுமையாக விளையாட விட்டாலும் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் எடுத்தது நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளதாக பதிரனா கூறியுள்ளார். குறிப்பாக தோனி மற்றும் சென்னை அணியில் நல்ல அனுபவத்தை கற்றுக் கொண்டதாகவும் பதிரனா கூறியுள்ளார்.

அத்துடன் தமக்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு அடுத்த வருடம் வந்து சிறப்பாக விளையாடி அன்பை திருப்பிக் கொடுப்பேன் என்று பதிரனா தெரிவித்துள்ளார். இது பற்றி சிஎஸ்கே நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “இது எனக்கு நல்ல சீசனாக அமைந்தது. நான் 6 போட்டியில் விளையாடி 13 விக்கெட்டுகள் எடுத்தேன். நன்றாக பந்து வீசிய நான் ஒரு ஆட்டநாயகன் விருதையும் வென்றேன்”

- Advertisement -

“பல்வேறு இடங்களில் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். எனவே இந்த சீசனில் பயிற்சியாளர்கள் மட்டுமின்றி மஹி பாய் போன்ற சீனியர்களிடமும் பாடங்களை கற்றுக் கொண்டேன். இருப்பினும் முன்கூட்டியே சிஎஸ்கே அணியிலிருந்து விலகுவது மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் தற்போது சிஎஸ்கே என்னுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகியுள்ளது. இந்த அணியை நான் விரும்புகிறேன். ஆனால் தற்போது நான் முன்கூட்டியே விலக வேண்டியுள்ளது”

இதையும் படிங்க: டி20 அணிக்கு அவரைப்போன்ற ஒரு கேப்டன் தான் கரெக்ட்.. அவரது தலைமையில் ஜெயிக்கனும் – யுவ்ராஜ் சிங் கருத்து

“அது கடினமாக இருந்தாலும் நான் அடுத்த வருடம் மீண்டும் விளையாட வருவேன். சிஎஸ்கே ரசிகர்களிடமிருந்து நான் நிறைய அன்பைப் பெற்றேன். எனவே அந்த அன்பை நான் அவர்களுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும். எங்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்கும் இது போன்ற ரசிகர்களை நான் மிகவும் விரும்புகிறேன். மிகவும் நன்றி” என்று கூறினார். இதைத் தொடர்ந்து சென்னை தங்களுடைய அடுத்த போட்டியில் குஜராத்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement