டி20 அணிக்கு அவரைப்போன்ற ஒரு கேப்டன் தான் கரெக்ட்.. அவரது தலைமையில் ஜெயிக்கனும் – யுவ்ராஜ் சிங் கருத்து

Yuvi
- Advertisement -

இந்தியாவில் தற்போது 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வரும் வேளையில் அடுத்ததாக ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை ஐசிசி-யின் டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டு இந்த தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் தங்களது உலகக்கோப்பை டி20 அணியை அறிவிட்டன.

இவ்வேளையில் இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ-யும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. அதன்படி ரோகித் சர்மா தலைமையில் முக்கிய வீரர்கள் பலரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு இறுதி போட்டியில் 50 ஓவர் உலகக் கோப்பையை நூலிழையில் தவறவிட்ட ரோகித் சர்மா இம்முறை டி20 உலக கோப்பை வெற்றி பெற்ற கேப்டனாக வரவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

ரோஹித் சர்மா இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் நமக்கு தற்போதைக்கு ஒரு நல்ல கேப்டன் தேவை. அழுத்தமான சூழ்நிலையின் போது விவேகமான முடிவுகளை எடுக்கக்கூடிய கேப்டன் தேவை. அப்படி பார்த்தால் ரோகித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது சரியான ஒரு விடயம் தான்.

- Advertisement -

கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை தவறவிட்டாலும் ஐந்து முறை அவர் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளார். எனவே அந்த அனுபவத்தை வைத்து இந்த உலக கோப்பையை கைப்பற்றி வெற்றிகரமான கேப்டனாக அவரை நான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : ரிங்கு போல ஆஸி தவறவிட்ட தங்கமான பிளேயர்.. ஐபிஎல் வரலாற்றில் யாருமே செய்யாத சரவெடி சாதனை

கோப்பையுடன் இருக்கும் கேப்டன் என்ற பெயரை எடுக்க அவர் தகுதியானவர். ரோகித் சர்மா அணி வீரர்களுடன் பழகுவதை நான் பார்த்திருக்கிறேன். அவரால் நிச்சயம் ஒரு மிகச்சிறந்த தலைவராக இருக்க முடியும். அணி வீரர்களுடன் எப்போதுமே நெருங்கிய நண்பராக இருக்கும் அவர் கேப்டனுக்கு தகுதியான அனைத்து குணங்களையும் கொண்டவர் என யுவ்ராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement