ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அறிமுக துவக்க வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் போட்டியிலேயே சதம் அடித்தது மட்டுமின்றி 171 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் பிரமாதமான வெற்றிக்கு வழி வகுத்தது. அதனை தொடர்ந்து அவர் இந்திய அணி பங்கேற்கும் ஏசியன் கேம்ஸ் தொடரிலும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏசியன் கேம்ஸ் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேளையில் ஒருநாள் கிரிக்கெட்-கான போட்டியில் அவர் இல்லை என்று தெரிகிறது.
இருந்தாலும் நிச்சயம் அவர் இந்திய அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்கும் வீரராக விரைவில் மாறுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : செப்டம்பர், அக்டோபர் மாதம் சீனாவில் ஏசியன் கேம்ஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான அணியில் ஜெய்ஸ்வால் இடம் பிடித்துள்ளார்.
என்னை பொறுத்தவரை அவர் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த அவர் தற்போதைக்கு ஒருநாள் அணியில் இல்லை என்றாலும் நிச்சயம் அவர் இன்னும் 8 முதல் 10 மாதங்களில் அனைத்து வகையான இந்திய அணியிலும் இடம் பிடிப்பார். அப்படி நடந்தால் நான் ஆச்சரியமும் படமாட்டேன்.
ஏனெனில் அந்த அளவிற்கு அவர் மிகவும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்று ஆகாஷ் சோப்ரா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த ஐபிஎல் தொடரில் ராகுல் திரிப்பாதி சரியாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும் அவரை ஆதரித்து இந்திய அணி தேர்வு செய்துள்ளது சரியான ஒரு விடயம் தான்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் இந்தியாவுக்கு சென்று விளையாடனும். குறிப்பாக ஒரு விஷயத்தை பண்ணியே ஆகனும் – ஷாஹித் அப்ரிடி கருத்து
அதேபோன்று ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் ரிங்கு சிங், விஜய் சங்கர் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது சரியான ஒன்று. அதோடு ஜித்தேஷ் சர்மா, ப்ரப்சிம்ரன் சிங் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களையும் தேர்வு செய்துள்ளனர். இந்த அனைத்து தேர்வுகளும் என்னை பொறுத்தவரை சரியான ஒன்று என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.