இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களா? – தெளிவான விளக்கமளித்த ஜெய் ஷா

Jay-Shah
- Advertisement -

ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த பேச்சுக்கள் ஒரு புறம் இருந்து வரும் வேளையில் மறுபுறம் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வரப்போகிறவர் யார்? என்பது குறித்த பேச்சுக்கள் அதிகளவில் நிலவி வருகின்றன. ஏனெனில் தற்போதைய பயிற்சியாளரான ராகுல் டிராவிடின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலக கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது.

மேலும் தான் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்ததால் அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ இறங்கிவிட்டது. அதோடு புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களையும் பெற்று வருகிறது.

- Advertisement -

எதிர்வரும் மார்ச் 27-ஆம் தேதி வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று கூறியுள்ள வேளையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த பதவிக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதோடு பி.சி.சி.ஐ-யும் தனிப்பட்ட முறையில் முன்னாள் ஜாம்பவான் சிலரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் ஸ்டீபன் பிளெமிங், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், வி.வி..எஸ் லட்சுமணன், கௌதம் கம்பீர் ஆகியோரது பெயர்கள் இந்த பட்டியலில் அடிபட்டு வரும் வேளையில் அடுத்தடுத்து சிலர் இந்த வாய்ப்பு வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றார். குறிப்பாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களான லாங்கர் மற்றும் பாண்டிங் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தாங்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று அறிவித்திருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய வீரர்களை அணுகினோமா? என்பது குறித்து பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தாமோ, பிசிசிஐ-யோ எந்த ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களையும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரி அணுகவில்லை. ஒரு சில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டு வருகின்றன என்று இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க : வேகம் மட்டும் போதாது.. 10க்கும் 1க்கும் வித்யாசமில்ல.. ஆர்சிபி தோல்விக்கான காரணம் பற்றி கம்பீர் பேட்டி

மேலும் பிசிசிஐ ஒரு சரியான நபரை பயிற்சியாளராக தேர்வு செய்து விரும்புகிறது என்றும் நிச்சயம் இந்திய அணியுடன் புரிதல் இருக்கும் ஒரு நபர்தான் பயிற்சியாளராக வருவார் என்றும் தெரிவித்ததால் நிச்சயம் முன்னாள் இந்திய வீரர்களே இந்த பொறுப்பை ஏற்பார்கள் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement