விராட், ரோஹித் மாதிரி 4000 ரன்ஸ் அடிச்சுட்டா போதுமா? பாபர் அசாம் டி20யில் விளையாடக்கூடாது.. ஸ்ரீகாந்த் விளாசல்

Srikkanth 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அந்த அணி கடந்த வருடம் பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று தம்முடைய பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம் மீண்டும் இந்த தொடரை முன்னிட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் இந்த தொடரிலும் அவருடைய தலைமையில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் முதல் முறையாக தோல்வியை பதிவு செய்து பாகிஸ்தான் அவமானத்தை சந்தித்தது. அத்துடன் இந்தியாவுக்கு எதிராக வெறும் 119 ரன்களை அடிக்க முடியாமல் டி20 உலகக் கோப்பையில் 7வது முறையாக பாகிஸ்தான் தோற்றது.

- Advertisement -

ஸ்ரீகாந்த் விளாசல்:
அதனால் அவருடைய கேப்டன்ஷிப் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் பேட்ஸ்மேனாக குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் தடுமாற்றமாக பேட்டிங் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ள பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் விளையாடக்கூடாது என்று முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போல 4000 ரன்கள் அடித்துள்ள பாபர் அசாம் அதை 112 – 115 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து என்ன பயன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நான் கருதவில்லை. டி20 கிரிக்கெட்டில் நீங்கள் அனைத்து நேரமும் தடவலாக விளையாட முடியாது”

- Advertisement -

“அவர்கள் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா போல பாபர் அசாம் 4000 ரன்கள் அடித்துள்ளதாக சொல்கின்றனர். ஆனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 112 – 115. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்?” என்று கூறினார். முன்னதாக ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற இரண்டாவது தர அணிகளுக்கு எதிராக பாபர் அசாம் அதிக ரன்கள் குவிப்பதாக ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கமாகும்.

இதையும் படிங்க: 55/3 டூ 238/6.. 143 ரன்ஸ்.. தனியாளாக இந்தியாவை தூக்கிய மந்தனா 3 புதிய சாதனை.. தெ.ஆ அணிக்கு எதிராக அபார வெற்றி

இருப்பினும் அந்த அணிகளுக்கு எதிராக அசத்தும் பாபர் அசாம் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளுக்கு எதிராக தடுமாறுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதனால் விராட் கோலியுடன் ஒப்பிடக்கூடாது என்பது போன்ற பல விமர்சனங்களை பாபர் அசாம் சந்தித்து வருகிறார். அதன் காரணமாக மீண்டும் அவர் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement