IPL 2023 : அந்த விஷயத்துல என்னால் ராஜஸ்தான் அணிக்கு எந்த பயனுமில்ல, பெஞ்சில் இருப்பது ஹேப்பி தான் – சஹால் ஓப்பன்டாக்

Yuzvendra Chahal Purple Cap
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் 2023 ஐபிஎல் டி20 தொடரில் புதுமையை ஏற்படுத்த வகையில் இம்பாக்ட் வீரர் என்னும் புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது டாஸ் வீசும் போது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எக்ஸ்ட்ரா 5 வீரர்கள் பட்டியலை நடுவர்களிடம் கேப்டன் கொடுத்து விட வேண்டும். அதைத்தொடர்ந்து போட்டி நடைபெறும் போது குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வீரருக்கு பதிலாக அந்த சமயத்தில் சிறப்பாக செயல்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அந்த அணி நிர்வாகம் கருதும் வீரரை நடுவரின் அனுமதியுடன் அந்த 5 பேரிலிருந்து ஒருவராக தேர்வு செய்து கொள்ளலாம்.

Chahal

- Advertisement -

இந்த விதிமுறை 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் அணிக்கு ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனையும் பந்து வீசும் அணிக்கு ஒரு எக்ஸ்ட்ரா பவுலரையும் களமிறக்கி விளையாடுவதற்கு உதவி செய்கிறது. அந்த வகையில் இந்த தொடரில் இந்த புதிய விதிமுறை பயன்படுத்திய சில அணிகளுக்கு பாதகம் ஏற்பட்டாலும் பெரும்பாலான அணிகளுக்கு சாதகம் கிடைத்து வெற்றி பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது.

எந்த பயனுமில்ல:
குறிப்பாக 2008க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யுஸ்வேந்திர சஹாலுக்கு பதிலாக துருவ் ஜுரேல் அல்லது தேவ்தூத் படிக்கல் இம்பேக்ட் வீரராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னராக இருக்கும் சஹால் 5 வருடங்களுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியும் இன்னும் பேட்டை ஒழுங்காக பிடிக்க தெரியாதவராகவே இருந்து வருகிறார்.

chahal

இருப்பினும் பெரிய பேட்ஸ்மேன் போல போஸ் கொடுத்து ஜாலியாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ள அவர் தம்மால் பேட்டிங் துறையில் எந்த வகையிலும் ராஜஸ்தான் அணிக்கு பயன்படும் வகையில் செயல்பட முடியாது என்பதால் இம்பேக்ட் வீரருக்கு வழிவிட்டு பெஞ்சில் அமர்வதை மகிழ்ச்சியாக செய்வதாக கூறியுள்ளார். இது பற்றி ராஜஸ்தான் அணி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த விதிமுறை எங்களது அணியில் மிகச் சிறப்பாக வேலை செய்து வருகிறது. குறிப்பாக துருவ் ஜுரேல் மற்றும் தேவ்தூத் படிக்கல் ஆகியோர் என்னுடைய இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்று வருகிறார்கள் என்பது எங்களுடைய அணிக்கு கூடுதல் பலமாகும். ஏனெனில் பேட்டிங் துறையில் என்னால் ராஜஸ்தான் அணிக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே பெரிய இலக்கை துரத்தும் போது எனது இடத்தில் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் விளையாடுவது நிச்சயமாக எங்களுக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார்.

Chahal-1

அவர் கூறுவது போல குஜராத்துக்கு எதிரான போட்டியில் தேவ்தூத் படிக்கல் இம்பேக்ட் வீரராக களமிறங்கி 26 ரன்கள் எடுத்ததும் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் துருவ் ஜூரேல் 32* (15) ரன்கள் எடுத்ததும் ராஜஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த வகையில் பேட்டிங்கில் உபயோகமில்லாத தமது இடத்தில் பேட்ஸ்மேன்கள் விளையாடும் அளவுக்கு இந்த புதிய விதிமுறை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக சஹால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் கடந்த வருட ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை எடுத்து ஊதா தொப்பியை வென்று மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அவர் இந்த வருடமும் 5 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் இம்முறை ஊதா தோப்பியை வெல்வதை விட கடந்த வருடம் ஃபைனலில் விட்ட கோப்பையை ராஜஸ்தானுக்கு வென்று கொடுப்பதே தம்முடைய இலக்கு என்று தெரிவிக்கும் அவர் அஸ்வின், ஆடம் ஜாம்பாவுடன் இணைந்து பந்து வீசுவது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

Chahal

இதையும் படிங்க:IPL 2023 : கனவு காணாதீங்க ரோஹித், டெத் ஓவருக்கு செட்டாக மாட்டாரு – அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி முன்னாள் ஆஸி வீரர் ஓப்பன்டாக்

“எங்கள் மூவரில் எந்த இருவர் விளையாடுவார்கள் என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்கிறது. இருப்பினும் சமீப காலங்களில் இணைந்து விளையாடும் எங்களுக்கிடையே நல்ல புரிதல் இருக்கிறது. இந்த சீசனில் ஊதா தொப்பியை வெல்வதை விட ராஜஸ்தான் அணிக்கு கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும்” என்று கூறினார்.

Advertisement