IPL 2023 : கனவு காணாதீங்க ரோஹித், டெத் ஓவருக்கு செட்டாக மாட்டாரு – அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி முன்னாள் ஆஸி வீரர் ஓப்பன்டாக்

Arjun Tendulkar
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்திற்கு உள்ளான வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் 6வது கோப்பையை வென்று கம்பேக் கொடுக்கும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அதில் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் முதல் 2 போட்டிகளில் தோற்றாலும் அடுத்த 3 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்த மும்பை ஹாட்ரிக் வெற்றிகளுடன் அசத்தி வருகிறது. அந்த அணிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய 2 முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைந்ததால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு வழியாக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Arjun Tendulkar 1

- Advertisement -

முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்களின் மகனான அவர் கடந்த சில வருடங்களாகவே நெட் பவுலராக செயல்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் ரஞ்சி கோப்பையில் கோவா அணிக்காக விளையாடி சதமடித்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் இந்த சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக அறிமுகமான அவர் 2 ஓவரில் விக்கெட் எதுவும் எடுக்காத நிலையில் ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில் 2.5 ஓவரில் 18 ரன்களை மட்டும் கொடுத்து தனது முதல் விக்கெட்டை எடுத்து சிறப்பாகவே செயல்பட்டார்.

கனவு காணாதீங்க:
குறிப்பாக கடைசி ஓவரில் 20 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் புவனேஸ்வர் குமாரை அவுட் செய்த அவர் கடந்த 3 வருடங்களாக மும்பை அணியிலிருந்து தன்னம்பிக்கையைப் பெற்று புதிய பந்தில் ஸ்விங் செய்யவும் டெத் ஓவர்களில் யார்கர் பந்துகளை வீசுவதற்கும் தெளிவான திட்டங்களுடன் முயற்சித்து வருவதாக போட்டியின் முடிவில் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டினார். அதாவது பும்ரா, ஆர்ச்சர் இல்லாத நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரை டெத் ஓவர்களில் பயன்படுத்துவதற்கு ஒரு திட்டத்தை வைத்துள்ளதாக ரோகித் சர்மா மறைமுகமாக தெரிவித்தார்.

SRH vs MI

இருப்பினும் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இதுவரை ஒரு முறை கூட 140 கி.மீ வேகத்தை தொடாத அர்ஜுன் டெண்டுல்கர் பெரும்பாலும் 120 – 130 வேகத்தில் மட்டுமே வீசுகிறார். குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியின் முதல் ஓவரின் கடைசி பந்தில் சோர்ந்து போய் 107 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசிய அவரை புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ரிங்கு சிங் போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்திருந்தால் சரமாரியாக அடித்திருப்பார்கள் என்று விமர்சித்த ரசிகர்கள் நல்ல லைன், லென்த் ஆகியவற்றுடன் இன்னும் சற்று வேகத்துடன் வீசினால் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்று தெரிவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் குறைவான அனுபவமும் வேகமும் கொண்டுள்ள அர்ஜுன் டெண்டுல்கர் மிடில் ஓவர்களில் பந்து வீசுவதற்கு சரியானவரே தவிர டெத் ஓவர்களுக்கு செட்டாக மாட்டார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் பிரபல பயிற்சியாளர் டாம் மூடி வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “டைமிங் சரியாக இருந்தால் மிடில் ஓவர்களில் அவர் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்ய முடியும் என்று நான் பார்க்கிறேன். ஆனால் நிச்சயமாக அவர் டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் கிடையாது”

“இருப்பினும் இந்த போட்டியில் அவர் வெளிப்படுத்திய செயல்பாடுகளை வைத்து நிமிர்ந்த தலையுடன் மகிழ்ச்சியாக நடக்கலாம். மேலும் இந்த போட்டியில் அவர் கடைசி ஓவரில் 20 ரன்களை டெயில் எண்டருக்கு எதிராகவே கட்டுப்படுத்தினார். இருப்பினும் இந்த அனுபவத்திற்கு அவர் சிறப்பாகவே செயல்பட்டார். இப்போட்டியில் கடைசி ஓவரை வீசியது அர்ஜுன் மற்றும் ரோஹித் ஆகிய இருவருக்குமே அழுத்தத்தை கொடுத்திருக்கும்”

இதையும் படிங்க:RR vs LSG : அரிதாக சொதப்பிய பட்லர், அதிரடி ராஜஸ்தானை குறைந்த இலக்கை துரத்த முடியாமல் லக்னோ மடக்கியது எப்படி

“ஏனெனில் ரோஹித் ஆரம்பத்திலேயே டெத் ஓவர்களில் பயன்படுத்த போகும் ஒருவராக அர்ஜுனை திட்டமிட்டிருக்க மாட்டார். எனவே மும்பை அணியில் புதிய பந்தில் வீசுவதே அர்ஜுனின் வேலையாக கொடுக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதை 2 போட்டிகளிலும் அவர் சிறப்பாக செய்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement