அவர் சொல்ற இடத்துல கண்ண மூடிக்கிட்டு பந்து வீசுவேன், கேரியரில் வளர ஹெல்ப் பண்ணாரு – முன்னாள் கேப்டனை பாராட்டிய சஹால்

Yuzvendra Chahal
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி 3 விதமான உலக கோப்பைகளை வென்று மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர். மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இப்போதைய அணியில் இருக்கும் வீரர்களுக்கு அப்போதே வாய்ப்பு கொடுத்து வளர்த்து அவர் இந்தியாவின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்தவர் என்றால் மிகையாகாது. அப்படி பன்முகத் திறமைகளை கொண்டுள்ள தோனி விக்கெட் கீப்பராக இருப்பதால் எதிரணி பேட்ஸ்மேன்கள் எப்படி அடிப்பார்கள் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்றார் போல் தம்முடைய பவுலர்களுக்கு ஆலோசனை வழங்கி அவுட் செய்வதில் வல்லவர் என்றே சொல்லலாம்.

kuldeep1

- Advertisement -

மேலும் 2007 டி20 உலகக்கோப்பை ஃபைனல் போல எதிரணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பவுண்டரிகளை அடித்தாலும் அருகே சென்று தோளில் தட்டி கொடுத்து ஆலோசனைகளை கொடுக்கும் தோனி பவுலர்களின் கேப்டனாகவே அறியப்படுகிறார். அந்த வகையில் 2017இல் அறிமுகமான குல்தீப் யாதவ் யாதவ் மற்றும் யுஸ்வென்ற சஹால் ஆகிய இளம் ஸ்பின்னர்களுக்கு ஆரம்பக் காலங்களில் தோனி நிறையவே உதவியாக இருந்தார். அதை பயன்படுத்தி 2019 உலகக்கோப்பையில் ஜோடியாக இடம் பிடிக்கும் அளவுக்கு அசத்திய அவர்கள் தோனி ஓய்வு பெற்றதும் தடுமாற்றமாக செயல்பட்டு ஃபார்மை இழந்து 2021 டி20 உலக கோப்பையில் தேர்வாகவில்லை.

சஹால் பாராட்டு:
இருப்பினும் காலத்திற்கும் தோனி இருக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு தற்போது தங்களது திறமையை வளர்த்துக் கொண்டுள்ள அவர்கள் மீண்டும் இந்திய அணிக்குள் நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆரம்ப காலங்களில் தோனி சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு அங்கே நம்பி பந்து வீசுவேன் என்று சஹால் கூறியுள்ளார். மேலும் அறிமுகமான காலகட்டங்களில் 50% தம்முடைய வேலையை தோனியே பார்த்துக் கொள்வார் என்று தெரிவிக்கும் சஹால் இந்தளவுக்கு வளர்வதற்கு அவர் உதவியதாகவும் நன்றி மறவாமல் பேசியுள்ளார்.

Dhoni chahal

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் அவரை கண்மூடித்தனமாக நம்புகிறேன். குறிப்பாக அவர் சொல்வதை நான் அப்படியே செய்து வந்தேன். அதிலும் அவர் சொல்லும் 95% விஷயங்களை நான் அப்படியே பின்பற்றுவேன். மறுபுறம் நான் 5% மட்டுமே என்னுடைய கருத்துக்களை அவரிடம் தெரிவிப்பேன். பொதுவாக 10 ஓவர்கள் முடிந்து நான் பந்து வீச வரும் போது அவருக்கு எந்த மாதிரியான சூழ்நிலைகள் மைதானத்தில் நிலவுகிறது பிட்ச் எப்படி இருக்கும் என்பது நன்றாக தெரிந்திருக்கும். அதை வைத்து அவர் கொடுக்கும் உள்ளீடுகளை பயன்படுத்தி நான் என்னுடைய அடுத்த சில ஓவர்களிலேயே விக்கெட்டுகளை எடுப்பேன்”

- Advertisement -

“அந்த கண்மூடித்தனமான நம்பிக்கை மிகவும் முக்கியமாகும். சொல்லப்போனால் நானும் அவருடைய ரசிகன். ஆரம்ப காலங்களில் அவர் என்னுடைய 50% வாழ்க்கையை எளிதாக்கினார். இல்லையெனில் நான் மைதானத்தின் தன்மையை அறியாமல் சுமாராக செயல்பட்டு வெளியே சென்றிருப்பேன். எனவே நிறைய உள்ளீடுகளை ஆரம்பத்திலேயே அவர் கொடுப்பதால் நாங்கள் ஆரம்பம் முதலே அட்டாக் செய்து பந்து வீசும் யுக்தியை கையிலெடுப்போம். குறிப்பாக மகிபாய் சொல்லிவிட்டாரே பின்பு என்ன பயம் என்ற தைரியத்துடன் செயல்படுவோம”

Chahal

“அதே போல அவருக்கு முன்பாக மட்டுமே நான் சற்று அடக்கமாகவும் இருப்பேன். குறிப்பாக ஜாலியான மூடில் இருந்தாலும் அவரிடம் நான் அதிகமாக பேச மாட்டேன். அதனால் அவர் ஏதாவது கேட்டால் மட்டுமே பதிலளிப்பேன் இல்லையேல் அமைதியாக இருப்பேன். ஒருமுறை செஞ்சூரியனில் நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடினோம். அப்போட்டியில் தான் முதல் முறையாக நான் 4 ஓவரில் 64 ரன்கள் கொடுத்தேன்”

இதையும் படிங்க:ஒரு இன்னிங்க்ஸை மட்டும் வைத்து அவரை குறை சொல்ல முடியாது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க – விக்ரம் ரத்தோர் ஆதரவு

“குறிப்பாக க்ளாஸென் என்னை சரமாரியாக அடித்து நொறுக்கினார். அப்போது என்னிடம் வந்த தோனி ரவுண்டு தி திசையில் இருந்து வீசுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அப்போதும் கிளாசின் என்னை சிக்ஸர் அடித்தார். அதைத்தொடர்ந்து மீண்டும் என்னிடம் வந்த தோனி “இன்றைய நாள் உனக்கானது அல்ல. அதனால் அடுத்து வரும் பந்துகளில் பவுண்டரி மட்டும் கொடுக்காமல் இரு” என்று கூறினார். அப்போது தான் உங்களுக்கு சுமாரான நாள் அமைந்தாலும் உங்களால் அணியின் வெற்றியில் அந்த வகையில் பங்காற்ற முடியும் என்பதை உணர்ந்தேன்” என கூறினார்.

Advertisement