ஒரு இன்னிங்க்ஸை மட்டும் வைத்து அவரை குறை சொல்ல முடியாது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க – விக்ரம் ரத்தோர் ஆதரவு

Vikram-Rathour
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த ஜூலை 12-ஆம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது 20-ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்க உள்ளது.

Ashwin

- Advertisement -

இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். அதேபோன்று விராட் கோலியும் 76 ரன்கள் குவித்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் புஜாராவின் இடத்தில் களமிறக்கப்பட்ட சுப்மன் கில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தார்.

இதன் காரணமாக புஜாராவின் 3-ஆவது இடத்தில் சுப்மன் கில் இறங்குவது தவறான முடிவா? என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது மூன்று துவக்க வீரர்கள் ஓப்பனிங் செய்ய தயாராக இருக்கிறார்கள்.

Shubman Gill 1

அதே வேளையில் மூன்றாம் இடத்தில் தானாக முன்வந்து இறங்குகிறேன் என சுப்மன் கில் கூறியது சரியான முடிவு தான் என்று நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் அவர் பஞ்சாப் அணிக்காகவும், இந்தியா ஏ அணிக்காகவும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் களமிறங்கியே அதிகளவில் விளையாடி இருக்கிறார். எனவே நடைபெற்று முடிந்த இந்த ஒரு டெஸ்ட் போட்டியை வைத்து மட்டும் அவரது இடத்தினை விமர்சிக்க கூடாது.

- Advertisement -

ஏனெனில் அவர் மிகவும் ஸ்ட்ராங்கான டெக்னிக் கொண்ட வீரர். பெரிய ரன்களை அடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. அதுமட்டும் இன்றி அணியை முன்னோக்கி கொண்டு செல்லும் ஆட்டமும் அவரிடம் இருக்கிறது. எனவே அவரை தொடர்ச்சியாக நாங்கள் மூன்றாவது இடத்திலேயே களமிறக்குவோம். இன்னும் அவருக்கு நேரம் இருக்கிறது நிச்சயம் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என விக்ரம் ரத்தோர் கூறினார்.

இதையும் படிங்க : அந்த தரமான இளம் பவுலரை ஏன் உலக கோப்பைல எடுக்காம ஆசிய கேம்ஸ்ல சேத்துருக்கீங்க? தேர்வுக்குழுவை விளாசும் ஆகாஷ் சோப்ரா

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் கூட சுப்மன் கில் சதம் அடித்திருந்தார். அவரது பேட்டிங் திறன் மீது எந்தவித சந்தேகமும் எங்களுக்கு கிடையாது. ஒரு முறை அவர் செட்டில் ஆகிவிட்டால் நிச்சயம் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என சுப்மன் கில்லின் இடம் மீதான விமர்சனம் குறித்து விக்ரம் ரத்தோர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement