அந்த தரமான இளம் பவுலரை ஏன் உலக கோப்பைல எடுக்காம ஆசிய கேம்ஸ்ல சேத்துருக்கீங்க? தேர்வுக்குழுவை விளாசும் ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறும் நிலையில் செப்டம்பர் 28 முதல் சீனாவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அப்படி ஒரே சமயத்தில் நடைபெறும் அந்த 2 தொடர்களில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. அதன் காரணமாக 2014க்குப்பின் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இம்முறை டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ருதுராஜ் கைக்வாட் தலைமையில் முழுவதுமாக இளம் கிரிக்கெட் வீரர்களை கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Arshdeep-Singh

- Advertisement -

அதில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் வாய்ப்பு பெறாத ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர் தேர்வாகியுள்ள நிலையில் சென்னை அணியில் அதிரடியாக விளையாடிய சிவம் துபே நீண்ட நாட்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ளார். ஆனால் அதே சமயம் இந்த தொடரில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர்களுக்கு 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்காது என்பது இப்போதே உறுதியாகியுள்ளது.

தரமான பவுலர்:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இளம் வீரர் அர்ஷிதீப் சிங் உலகக்கோப்பையில் தேர்ந்தெடுக்காமல் இந்த அணியில் இடம் பெற்றுள்ளது தமக்கு ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த அவர் கடந்த 2019 முதல் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி 51 போட்டிகளில் 57 விக்கெட்களை 8.74 என்ற எக்கனாமியில் எடுத்துள்ளார். குறிப்பாக 2022 சீசனில் 7.70 என்ற குறைந்த எக்கனாமியில் பந்து வீசி டெத் ஓவர்களில் பும்ரா, ரபாடா போன்றவர்களை மிஞ்சி சிறப்பாக செயல்பட்ட அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார்.

Arshdeep Singh

அதில் உம்ரான் மாலிக் போல அல்லாமல் நல்ல லைன், லென்த் போன்ற விவேகங்களை பின்பற்றி அசத்திய அவர் 2022 டி20 உலகக் கோப்பையில் தேர்வாகி அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலராக சாதனையும் படைத்தார். அதனால் ஜாகிர் கானுக்கு பின் இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கான இந்தியாவின் நீண்ட கால தேடலுக்கு பரிசாக கிடைத்துள்ளதாக ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற அவர் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் போல ஸ்விங் செய்து பந்து வீசுவதாக சில முன்னாள் வீரர்களும் பாராட்டினர்.

- Advertisement -

ஆனால் ஜனவரியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் நோபால்களை போட்டு தள்ளி மோசமான உலக சாதனை படைத்ததால் அதிரடியாக நீக்கப்பட்ட அவரை தற்போது ஒரு தவறுக்காக உலக கோப்பையிலும் கழற்றி விடுவதற்கு தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளது. இருப்பினும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் தான் காலம் காலமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். மறுபுறம் தற்போதைய இந்திய அணியில் பும்ரா, சிராஜ், ஷமி என அனைவருமே வலது கை பவுலர்கலாக இருக்கின்றனர்.

Arshdeep Singh Stumps

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இளம் வயதில் யாருமே தடுமாற்றமாக செயல்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு அடுத்து வரும் தொடர்களில் வாய்ப்பளித்து வளர்ப்பதே சிறந்த முடிவாக இருக்கும். சொல்லப்போனால் இலங்கை தொடரில் நோ-பால்களை வீசினாலும் ஐபிஎல் 2023 தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அடுத்தடுத்து மிடில் ஸ்டம்ப்களை உடைத்த அர்ஷிதீப் பஞ்சாப்புக்கு அபார வெற்றி பெற்றுக் கொடுத்த திறமையுடையவர் என்றே சொல்லலாம்.

- Advertisement -

எனவே அவர் ஆசிய விளையாட்டு அணியில் மட்டுமே இருப்பது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அர்ஷிதீப் பெயர் இந்த அணியில் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது அவரை ஒருநாள் போட்டிகளில் தேர்வுக்குழுவினர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகும். சொல்லப்போனால் அவரை வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரிலும் நீங்கள் சேர்க்கவில்லை”

chopra

இதையும் படிங்க:அந்த சான்ஸ் கிடைக்காததால் பாத்ரூமில் சென்று அழுதேன், தமது கேரியரின் – சோகமான நாளை பகிர்ந்த சஹால்

“அதே போல ஆசிய கோப்பையிலும் அவரை தேர்வு செய்யாத நீங்கள் உலகக் கோப்பையில் இருந்தும் வெளியே வைத்துள்ளீர்கள். அந்தளவுக்கு என்ன நடந்தது? ஏனெனில் அர்ஷிதீப் நீண்ட காலத்திற்கு 3 வகையான கிரிக்கெட்டில் அல்லது குறைந்தபட்சம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அசத்தக்கூடிய திறமை கொண்டவர். ஆனால் தற்போது அவர் அணியில் இல்லை” என்று கூறினார்.

Advertisement