அந்த சான்ஸ் கிடைக்காததால் பாத்ரூமில் சென்று அழுதேன், தமது கேரியரின் – சோகமான நாளை பகிர்ந்த சஹால்

Yuzvendra Chahal Virat Kohli
- Advertisement -

ஹரியானாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் 2004 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி கடந்த 2011இல் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமாகி 2013 வரை நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்று தடுமாறி வந்தார். இருப்பினும் 2014இல் பெங்களூரு அணிக்காக விளையாட தேர்வான அவர் அப்போதிலிருந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக தொட்டாலே சிக்சர்கள் பறக்கக்கூடிய சின்னசாமி மைதானத்தில் பொல்லார்ட், ரசல் போன்ற காட்டடி பேட்ஸ்மேன்களுக்கு பயப்படாமல் தைரியமாக விக்கெட்களை எடுத்து அசத்திய அவர் 2016இல் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

- Advertisement -

அந்த வாய்ப்பிலும் அசத்திய அவர் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி முதல் 2019 உலகக்கோப்பை வரை முதன்மை ஸ்பின்னராக வலம் வந்தார். இருப்பினும் 2020, 2021 ஐபிஎல் தொடர்களில் ஃபார்மை இழந்து தடுமாறிய காரணத்தால் துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்படாத அவர் பெங்களூரு அணியிலிருந்தும் அதிரடியாக கழற்றி விடப்பட்டார். ஆனாலும் அதற்காக மனம் தளராமல் மீண்டும் 2022 சீசனில் ராஜஸ்தான் அணியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக சாதனை படைத்து ஊதா தொப்பியை வென்று கம்பேக் கொடுத்த அவர் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியிலும் தற்போது ஓரளவு நிலையான இடத்தைப் பிடித்துள்ளார்.

அழுத சஹால்:
இந்நிலையில் 2021 டி20 உலகக் கோப்பையில் கடைசி நேரத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வானதால் தமக்கு இடம் கிடைக்காமல் போனதை நினைத்து அந்த சமயங்களில் குளியலறையில் சென்று அழுததாக சஹால் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி கேப்டனாக இருந்தும் தாம் எவ்வித தொடர்பும் இல்லாமல் கழற்றி விடப்பட்டதாக தெரிவிக்கும் அவர் கேரியரின் அந்த சோகமான நாட்களில் தம்முடைய மனைவி தான் ஆதரவாக இருந்ததாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Yuzvendra Chahal

“பொதுவாக நான் அழுவதில்லை. ஆனால் 2021 டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்படாததால் மிகப் பெரிய சோகமடைந்த நான் அன்றைய நாளில் பாத்ரூமுக்கு சென்று கண்ணீர் விட்டேன். குறிப்பாக அந்த சமயத்தில் நான் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாட தயாரானேன். அதாவது லாக் டவுன் காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்ட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு நானும் என்னுடைய மனைவியும் விமானத்தை பிடிக்க வேண்டிய நிலைமையில் இருந்தோம். அந்த சமயத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால் இந்தியாவுக்கு தேர்வு செய்யப்படாதது எனக்கு நிறைய சோகத்தை கொடுத்தது”

- Advertisement -

“இருப்பினும் என்னுடைய அருகில் இருந்த மனைவி எனது கோபத்தையும் சோகத்தையும் கட்டுப்படுத்துமாறு கூறினார். ஒருவேளை அவர் அங்கே இல்லாமல் இருந்திருந்தால் நான் இன்னும் அதிகமாக சோகமடைந்திருப்பேன். மேலும் அந்த சமயங்களில் நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்து திரைப்படங்களை பார்த்து காலத்தை கழித்தோம். ஆனாலும் அந்த உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது”

Chahal

“ஏனெனில் இந்தியாவின் கேப்டனாக இருந்த விராட் கோலி தலைமையில் தான் பெங்களூரு அணியிலும் நான் விளையாடினேன். இருப்பினும் நான் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை பற்றி யாருமே கேட்கவுமில்லை அதற்கான காரணத்தையும் சொல்லவில்லை. ஆனால் அந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு ஐபிஎல் தொடரில் எஞ்சிய 7 போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடி செயலால் பதிலடி கொடுக்குமாறு என்னுடைய மனைவி சொன்னார்”

இதையும் படிங்க:இந்திய அணிக்காக நான் தேர்வானதும் ராகுல் டிராவிட் எனக்கு குடுத்த அட்வைஸ் இதுதான் – ஜித்தேஷ் சர்மா ஓபன்டாக்

“அப்போது தான் நானும் அதை உணர்ந்து களத்தில் சிறப்பாக விளையாட துவங்கினேன். அந்த வகையில் அதுவே என்னுடைய கேரியரின் சோகமான பகுதியாகும்” என்று கூறினார். அப்படி கடினமான காலங்களை கடந்து வந்துள்ள சஹால் இது வரை 72 ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளையும் 75 டி20 போட்டிகளில் 91 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement