இந்திய அணிக்காக நான் தேர்வானதும் ராகுல் டிராவிட் எனக்கு குடுத்த அட்வைஸ் இதுதான் – ஜித்தேஷ் சர்மா ஓபன்டாக்

Jitesh-and-Dravid
- Advertisement -

உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விதர்பா அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஜித்தேஷ் சர்மா ஏசியன் கேம்ஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Jitesh Sharma

- Advertisement -

ஏற்கனவே இந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணியில் ஜித்தேஷ் சர்மா இடம் பிடித்திருந்தாலும் இதுவரை அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் இந்த ஏசியன் கேம்ஸ் தொடரில் அவர் பிளேயிங் லெவனில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வான போது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனக்கு ஒரு அறிவுரையை கூறியதாகவும், அது என்ன? என்பது குறித்த தகவலை தற்போது ஜித்தேஷ் சர்மா தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அந்த வகையில் ஜித்தேஷ் சர்மா கூறியதாவது : ராகுல் டிராவிட் சாருடன் நான் நிறைய ஆலோசனையில் ஈடுபட்டேன்.

Jitesh sharma and dravid

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் நான் முதன் முறையாக இந்திய அணிக்கு தேர்வானபோது டிராவிட் சார் என்னிடம் : “நீ விளையாடும் பேட்டிங் ஸ்டைலை மாற்றிக் கொள்ள வேண்டாம்”, “உன்னுடைய ஸ்டைலிலேயே நீ பேட்டிங் செய்”, உன்னை போன்ற ஒரு ஸ்பெஷலான வீரரை தான் நாங்கள் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்திற்காக தேடி வருகிறோம் என டிராவிட் தன்னிடம் கூறியதாக ஜித்தேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் பினிஷர் ரோலில் களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா 14 இன்னிங்ஸ்களில் 156 ஸ்ட்ரைக் ரேட் உடன் 23 ரன்கள் சராசரியுடன் 309 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதோடு ஒட்டுமொத்தமாக இதுவரை 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒன்பது அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 2096 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க : இப்படி ஒன்னு இருக்கா? வெ.இ 2வது டெஸ்டில் வென்றாலும் பறிபோக காத்திருக்கும் இந்தியாவின் நம்பர் ஒன் – காரணம் இதோ

அதோடு விக்கெட் கீப்பிங்கில் 57 கேட்ச்கள் மற்றும் 14 ஸ்டம்பிங்களை அவர் செய்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ஏசியன் கேம்ஸ் தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மா, ரிங்கு சிங், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் போன்ற ஐபிஎல் தொடரில் கலக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement