இப்படி ஒன்னு இருக்கா? வெ.இ 2வது டெஸ்டில் வென்றாலும் பறிபோக காத்திருக்கும் இந்தியாவின் நம்பர் ஒன் – காரணம் இதோ

IND vs WI Rohit Sharma
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஜூலை 12ஆம் தேதி துவங்கிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவக்கி புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது. சொல்லப்போனால் அந்த போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத வெஸ்ட் இண்டீஸ் 2 இன்னிங்ஸ்களிலும் திண்டாட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இரண்டரை நாட்களுக்குள் சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது.

Jaiswal IND vs WI

- Advertisement -

மேலும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்து ஏராளமான சாதனைகள் படைத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றது போலவே ரவிச்சந்திரன் அஸ்வின் மொத்தமாக 12 விக்கெட்டுகள் சாய்த்து கருப்பு குதிரையாக செயல்பட்டார். இதைத்தொடர்ந்து வரும் ஜூலை 20ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் துவங்கும் இத்தொடரின் 2வது போட்டியிலும் பலமான இந்தியாவை வென்று 2 – 0 (2) என்ற கணக்கில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பறிபோகும் நம்பர் ஒன் இடம்:
இருப்பினும் 2023 உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறிய பலவீனமான வெஸ்ட் இண்டீஸை அடித்து என்ன பயன் என்று தங்களுடைய அணியை இந்திய ரசிகர்களே கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் 121 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவை இங்கிலாந்தில் நடைபெற்ற வரும் ஆஷஸ் தொடரை வெல்லும் பட்சத்தில் 116 புள்ளிகளுடன் 2வது இடத்தில் ஆஸ்திரேலியா முந்துவதற்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ENG vs AUS Ben Stokes

அந்த தொடரில் 3வது போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் 2 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் ஆஸ்திரேலியா சமீபத்தில் இந்தியாவை தோற்கடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வென்று சாம்பியனாக ஜொலிக்கிறது. அதனால் சொந்த மண்ணில் கடுமையாக போராடி 3வது போட்டியில் வென்று தப்பித்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா பதிவு செய்யும் வெற்றியின் அடிப்படையில் இந்தியாவின் நம்பர் ஒன் இடம் பறிபோவதற்கு வாய்ப்புள்ளதைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. ஒருவேளை எதிர்பார்த்தது போலவே இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றாலும் அடுத்த 2 போட்டிகளில் வென்று ஆஷஸ் தொடரை 4 – 1 என்ற கணக்கில் கைப்பற்றும் பட்சத்தில் ஆஸ்திரேலியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறிவிடும்.

ENg vs AUS Ben STokes Pat Cummins

2. ஒருவேளை 2வது டெஸ்ட் ட்ராவில் முடிந்து 1 – 0 என்ற கணக்கில் இந்தியா இத்தொடரை வெல்லும் பட்சத்தில் ஆஷஸ் தொடரை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றாலே தரவரிசையில் நம்பர் ஒன் அணி என்ற அந்தஸ்தை தன் வசமாக்குவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

- Advertisement -

3. மேலும் ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் வென்று 1 – 1 என்ற கணக்கில் இத்தொடரை இந்தியா சமன் செய்யும் பட்சத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டிகளை டிரா செய்து 2 – 1 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை வென்றாலும் ஆஸ்திரேலியா உலகின் நம்பர் ஒன் அணியாகி விடும் அல்லது 3 – 2 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை வென்றாலும் இந்தியாவை முந்தி ஆஸ்திரேலியா உலகின் நம்பர் அணியாக முன்னேறும்.

IND-vs-AUS

இதையும் படிங்க:IND vs IRE : வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவைடைந்த கையோடு டிராவிடுக்கு ஓய்வு – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முக்கிய முடிவு

அப்படி தரவரிசையில் நம்பர் ஒன் இடம் பறிபோவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருந்தாலும் அதற்காக இந்திய ரசிகர்கள் கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஏனெனில் தற்சமயத்தில் டெஸ்ட் மற்றும் டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் 2022 டி20 உலக கோப்பை மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா தோற்றது. அதனால் இந்த தகுதியற்ற பெருமை ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்று இந்திய ரசிகர்களே கோபத்துடன் தெரிவிக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

Advertisement