IND vs IRE : வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவைடைந்த கையோடு டிராவிடுக்கு ஓய்வு – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முக்கிய முடிவு

Dravid
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் காத்திருக்கிறது.

IND vs WI Rohit Sharma

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது முடிவடைந்த கையோடு இந்திய அணியானது அங்கிருந்து நேரடியாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த டி20 தொடரானது ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி துவங்கி 23-ஆம் தேதி வரை டப்ளின் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிப்பதோடு மட்டுமின்றி அணியின் பயிற்சியாளர் டிராவிட் மற்றும் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கும் ஓய்வு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Laxman

ஏனெனில் எதிர்வரும் இந்த அயர்லாந்து தொடருக்கு பின்னர் ஆசிய கோப்பை தொடர், 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் என இந்திய அணி ஓய்வின்றி அடுத்தடுத்த தொடர்களில் பங்கேற்க இருப்பதினால் அதற்கு முன்னதாக இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் முன்னணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக பி.சி.சி.ஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மேலும் இந்த அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் இளம் வீரர்களைக் கொண்ட அணியே அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்றும் அந்த அணிக்கு வி.வி.எஸ் லட்சுமணன் பயிற்சியாளராக செயல்பட உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வீடியோ : 106 மீட்டர் மெகா சிக்சரை விளாசி மாஸ் இன்னிங்ஸ் ஆடிய ப்ராவோ – 2வது போட்டியில் சூப்பர் கிங்ஸ் வென்றதா?

ஏனெனில் சமீப காலமாகவே டிராவிட் பணிச்சுமை காரணமாக அவ்வப்போது ஓய்வெடுக்கையில் வி.வி.எஸ் லக்ஷ்மணனே இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். எனவே லக்ஷ்மன் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரது கூட்டணியிலேயே இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் என்றும் அந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இடம் பெறுவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement