106 மீட்டர் மெகா சிக்சரை விளாசி மாஸ் இன்னிங்ஸ் ஆடிய ப்ராவோ – 2வது போட்டியில் சூப்பர் கிங்ஸ் வென்றதா?

Dwayne Bravo
- Advertisement -

அமெரிக்காவில் இந்த வருடம் முதல் முறையாக துவங்கப்பட்டுள்ள மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு மேத்தியூ ஷார்ட் அதிரடியாக விளையாடிய நிலையில் மற்றொரு தொடக்க வீரர் கௌஸ் ஆரம்பத்திலேயே 7 (6) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த அகமது தடுமாற்றமாக செயல்பட்டு 20 (20) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அந்த நிலைமையில் வந்த கிளன் பிலிப்ஸ் 6 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மேத்தியூ ஷார்ட் அரை சதமடித்து 10 பவுண்டரி 3 சிக்சருடன் 80 (50) ரன்கள் குவித்து 16 ஓவர்கள் வரை நிலைத்து நின்று தனது அணியை வலுப்படுத்தி ஆட்டமிழந்தார். இறுதியில் கேப்டன் ஹென்ரிக்ஸ் 21 (24) ரன்களும் பியானர் 18* (11) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் வாஷிங்டன் 163/5 ரன்கள் எடுக்க டெக்ஸாஸ் சார்பில் அதிகபட்சமாக ஜெரால்டு கோட்சி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

ப்ராவோ அதிரடி:
அதைத்தொடர்ந்து 164 ரன்களை துரத்திய டெக்ஸாஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே நம்பிக்கை நட்சத்திரம் டேவோன் கான்வே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க மறுபுறம் தடுமாறிய கேப்டன் டு பிளேஸிஸ் 14 (15) ரன்களில் ஆட்டமிழந்தார். அதை விட அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் 14 (11) மிலிந்த் குமார் 3 (5) லகிரு மிலாந்தா 15 (20) மிட்சேல் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் வாஷிங்டன் அணியின் சிறப்பான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் 50/5 என ஆரம்பத்திலேயே டெக்ஸாஸ் சரிவை சரிந்த போது களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ட்வயன் ப்ராவோ அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். இருப்பினும் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த மிட்சேல் சாட்னர் 22 (19) ரன்கள் அடித்து ஆட்டமிழந்ததால் பின்னடைவை சந்தித்த ப்ராவோ மனம் தளராமல் தொடர்ந்து அரை சதமடித்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

குறிப்பாக அன்றிச் நோர்டெஜ் வீசிய 18வது ஓவரின் 2வது பந்தில் முழுமையான பவர் கொடுத்து அடித்த அவர் 106 மீட்டர் மெகா சிக்சரை பறக்க விட்டு ரசிகர்கள் மற்றும் வர்னணையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். ஆனாலும் எதிர்ப்புறம் கை கொடுப்பதற்கு பேட்ஸ்மேன் இல்லாததால் ரன் ரேட் எகிறிய நிலையில் அன்றிச் நோர்ட்ஜெ வீசிய கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற அசாத்தியமான சூழ்நிலை டெக்சாஸ் அணிக்கு ஏற்பட்டது.

இருப்பினும் அதிலும் போராடிய ப்ராவோ 2, 6, 2, 0, 4, 6 என 20 ரன்கள் எடுத்து நீண்ட நாட்கள் கழித்து பேட்டிங்கில் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 76* (39) ரன்களை விளாசி வெறித்தனமாக போராடியும் வெற்றி காண முடியவில்லை. அதனால் டெக்ஸாஸ் அணியை 20 ஓவர்களில் 157/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய வாஷிங்டன் 6 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:மும்பையின் எம்ஐ கிட்ட முடியுமா? ஆர்சிபியின் 49 ஆல் அவுட் சாதனையை ஜஸ்ட் மிஸ் செய்த ரசல் அணி – கலாய்க்கும் ரசிகர்கள்

அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் மற்றும் அகில் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு 80 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய மேத்தியூ ஷார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இதனால் வாஷிங்டன் முதல் போட்டியில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து இப்போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் 2 போட்டிகளில் முதல் தோல்வியை பதிவு செய்த டெக்ஸாஸ் இன்னும் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருப்பதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய நிலைமைக்கு வந்துள்ளது

Advertisement