பாகிஸ்தானை விட இந்தியாவே முக்கியம்.. பாதியிலேயே வெளியேறிய கைரன் பொல்லார்ட்.. பிஎஸ்எல் ரசிகர்கள் அதிருப்தி

Kieron Pollard
- Advertisement -

பாகிஸ்தானில் பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஷான் மசூட் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் கைரன் பொல்லார்ட் விளையாடி வருகிறார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி வெறும் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் திணறி வருகிறது.

எனவே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறுவதற்கு அடுத்து வரும் போட்டிகளில் அந்த அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரில் இருந்து பொல்லார்ட் அவசரமாக பாதியிலேயே வெளியேறி இந்தியாவுக்கு வந்துள்ளார். குறிப்பாக குஜராத்தில் நடைபெறும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா வந்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவே முக்கியம்:
கடந்த 2010 முதல் ஐபிஎல் தொடரில் அம்பானி நிர்வகிக்கும் மும்பைக்காக விளையாடிய பொல்லார்ட் ரோகித் சர்மா தலைமையில் அந்த அணி 5 கோப்பைகளை வெல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதன் காரணமாக தன்னுடைய சர்வதேச கேரியரிலும் சொந்த வாழ்விலும் பொல்லார்ட் உயர்ந்து விளங்குவதற்கு மும்பை அணி முக்கிய பங்காற்றியது என்றே சொல்லலாம்.

சொல்லப்போனால் 2022இல் ஓய்வு பெற்ற அவரை மீண்டும் வெளியே விடாத மும்பை அணி நிர்வாகம் தங்களுடைய பயிற்சியாளராக நியமித்துள்ளது. அது போக தென் ஆப்பிரிக்கா மற்றும் துபாயில் நடைபெறும் டி20 தொடர்களில் மும்பையின் கிளை அணிகளிலும் பொல்லார்ட் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். அதனால் முகேஷ் அம்பானியின் மகன் விழாவிற்கு அழைத்ததும் உடனடியாக பொல்லார்ட் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

- Advertisement -

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகியோரின் இந்த திருமண விழாவில் இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சூரியகுமார் யாதவ், ப்ராவோ, ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட மும்பை அணிக்காக விளையாடிய முன்னாள் இந்நாள் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: 42/5 என சரிந்த போது கைகொடுத்த சுந்தர், சங்கர்.. மும்பையிடம் சறுக்கிய தமிழ்நாடு.. கம்பேக் கொடுக்குமா?

இருப்பினும் கராச்சி கிங்ஸ் இக்ட்டான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் போது இப்படி பாகிஸ்தானை விட இந்தியா தான் முக்கியம் என்ற வகையில் பொல்லார்ட் பாதியிலேயே சென்றுள்ளது பிஎஸ்எல் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து திருமண விழா முடிந்ததும் உடனடியாக பாகிஸ்தானுக்கு திரும்பி அவர் பிஎஸ்எல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement